குசுமா மூர்த்தி

இந்திய அரசியல்வாதி

குசுமா கிருஷ்ண மூர்த்தி (Kusuma Murthy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஆறாவது, ஏழாவது மற்றும் ஒன்பதாவது மக்களவையில் அமலாபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர்.

குசுமா மூர்த்தி
Kusuma Murthy
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1989–1991
தொகுதிஅமலாபுரம்
பதவியில்
1980–1984
தொகுதிஅமலாபுரம்
பதவியில்
1977–1979
தொகுதிஅமலாபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு[1]
கல்விமுதுகலை
முன்னாள் கல்லூரிநாக்பூர் பல்கலைக்கழகம்

இளமை

தொகு

மூர்த்தி 1940ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தார். இவர் ஸ்ரீ கோனசீமா பானோஜி ராமர் கல்லூரியில் தனது கல்வியைக் கற்றார். பின்னர் ஆந்திரா மற்றும் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

அரசியல்

தொகு

1980-82 வரை மூர்த்தி தனது அரசியல் வாழ்க்கையில் கூட்டுத் தேர்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பான குழு உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். இவர் ஆறாவது, ஏழாவது மற்றும் ஒன்பதாவது மக்களவை பொதுத் தேர்தலில் அமலாபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். நவம்பர் 1983 முதல் ஜனவரி 1985 வரை இந்தியத் தேசிய காங்கிரசு குழுவின் இணைச் செயலாளராகப் பணியாற்றியதோடு, 1990-ல் பெட்ரோலியம் மற்றும் இரசாயனத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Kusuma Krishna Murty,Amalapuram Lok Sabha 1977". latestly.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-16.

மேலும் படிக்க

தொகு
  • "Members : Lok Sabha". Parliament of India, Lok Sabha. 2021-09-16. பார்க்கப்பட்ட நாள் 2021-09-16.
  • "Members : Lok Sabha". Parliament of India, Lok Sabha (in கின்யாருவான்டா). 2021-09-16. பார்க்கப்பட்ட நாள் 2021-09-16.
  • "Members : Lok Sabha". Parliament of India, Lok Sabha. 2021-09-16. பார்க்கப்பட்ட நாள் 2021-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசுமா_மூர்த்தி&oldid=3827575" இலிருந்து மீள்விக்கப்பட்டது