குசும் மெக்தெலே
இந்திய அரசியல்வாதி
குசும் மெக்தெலே (Kusum Mehdele)(பிறப்பு: ஆகத்து 15, 1943) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மத்தியப் பிரதேச அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றி உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மற்றும் பன்னா தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் 1984 முதல் 1990 வரை மூன்று முறை பாரதிய ஜனதா மகளிர் பிரிவு தலைவராகவும், 1984-86 மற்றும் 1995-96-இல் இரண்டு முறை மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
குசும் மெக்தெலே | |
---|---|
மத்திய பிரதேச அரசு | |
பதவியில் 21 திசம்பர் 2013 – 2018 | |
பின்னவர் | பால பச்சன், சுக்தே பான்சே |
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 2013–2018 | |
பின்னவர் | பிரிஜேந்திர பிரதாப் சிங் |
தொகுதி | பன்னா |
பதவியில் 1998–2008 | |
பின்னவர் | சிறீகாந்த் துபே |
தொகுதி | பன்னா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 ஆகத்து 1943[1] |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
கல்வி | இளம் அறிவியல், இளங்கலைச் சட்டம் |
தொழில் | வழக்கறிஞர் |
2005-இல், பாபுலால் கௌரின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். மேலும் சிவராஜ் சிங் சௌகான்அமைச்சரவையிலும் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑
{{cite web}}
: Empty citation (help) - ↑ Mehdele incident: BJP tries caste card