குடும்பி
குடும்பி (Kudumbi) குனுபிகள், குரும்பி அல்லது குன்பி என்றும் குறிப்பிடப்படும் இவர்கள் பாரம்பரியமாக இந்தியாவின் கேரளாவில் வசிக்கும் கொங்கணி பேசும் விவசாய சமூகமாகும். இவை தமிழ்நாட்டின் குடும்பன்/குடும்பியர் (தேவேந்திரகுல வேளாளர்) இனத்தின் ஒரு கிளை ஆகும்.[1][2]
வரலாறு
தொகுகோவா மரபு
தொகுகோவாவின் வரலாற்றாசிரியர் அனந்த் ராமகிருஷ்ண தூமே, குன்பி சாதி பண்டைய முண்டாரி பழங்குடியினரின் நவீன சந்ததியினர் என விவரிக்கிறார். அமேலும் அவர் கொங்கணி மொழியில் முண்டாரி தோற்றம் கொண்ட பல சொற்களையும் குறிப்பிடுகிறார். பண்டைய பழங்குடியினரால் வணங்கப்படும் தெய்வங்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள், விவசாய முறைகள் போன்றவற்றையும் விரிவாக விளக்குகிறார்.[3]
இந்து மதத்தை ஒடுக்க முயன்ற கோவா சமயக் குற்றவிசாரணையின் போது குடும்பிகள் போர்த்துகேயர்களால் சமயக் குற்ற விசாரணை நடத்தி கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.[4][4][5][6] சிலர் மரண தண்டனைக்கும் ஆளானர்கள்[7][8] இவர்கள் கோவாவிலிருந்து குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தங்கள் மத மற்றும் கலாச்சார அடையாளத்தை பாதுகாக்க விரும்பிய குடும்பிகள், கவுட சாரஸ்வத் பிராமணர், தெய்வத்ன பிராமணர் மற்றும் வைசிய வாணிகளுடன் சேர்ந்து, இந்தியாவின் மேற்கு கடற்கரையில் இருந்து முதன்மையாக கடல் பயணங்கள் மூலம் குடிபெயர்ந்தனர்.
கோவாவிலிருந்து தப்பியோடிய சில குழுக்கள் கருநாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களான தெற்கு கன்னட மாவட்டம், வடகன்னட மாவட்டம் மற்றும் உடுப்பி மாவட்டம் போன்ற இடங்களில் குடியேறினர். ஒருசில குழுக்கள் கேரளாவிலும் பயணித்தன.[9]
சமூகவியலாளர் ஒய். ஆர். ராவ் (2003) கருநாடகாவின் ஒரு பகுதியில் வசித்து வந்த கோவாவைச் சேர்ந்த குடும்பிகளிடையே களப்பணிகளை மேற்கொண்டார். அவர்களின் உணவுப் பழக்கம், தடைகள், மொழி, பொருளாதாரம், அரசியல் அமைப்பு, உறவு மற்றும் திருமணம் தொடர்பான பல்வேறு நடத்தைகளை அவர் ஆய்வு செய்தார். இந்து மதமாற்றம், சமசுகிருதமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவை நடத்தை மாற்றங்களை பாதிக்கக்கூடிய மூன்று காரணிகளாக அவர் அடையாளம் காட்டுகிறார்.
தற்போதைய நிலை
தொகுகேரளாவில் பொதுவுடைமை இயக்கத்தின் முக்கிய நபரும் முன்னாள் அமைச்சருமான கே. ஆர். கௌரி அம்மா தனது சுயசரிதையில் குடும்ப சமூகத்தின் பின்தங்கிய தன்மையை விவரித்துள்ளார்
கொச்சியைச் சுற்றியுள்ள தீவுகளில் உள்ள முக்கிய விவசாயத் தொழிலாளர்கள் புலயர் மற்றும் குடும்பி சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று இடப்பெயர் ஆய்வாளர் வி. வி. கே. வாலத் கூறுகிறார். போர்த்துக்கேய காலத்தில் புலயர் மற்றும் முக்குவார் சாதிகளைச் சேர்ந்த பலர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய போதிலும், குடும்பிகள் தங்கள் பாரம்பரிய மத நம்பிக்கைகளைத் தக்க வைத்துக் கொண்டனர் என்று அவர் மேலும் கூறுகிறார்.
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களுக்குள் இந்த சமூகம் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குடும்பி கோயில்கள்
தொகுவண்ணங்களின் திருவிழாவான ஹோலி பல தேவி கோயில்களில் குடும்பிகளால் கொண்டாடப்படுகிறது.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Loes Ch. Schenk-Sandbergen (1988). Poverty and survival: Kudumbi female domestic servants and their households in Alleppey, Kerala. Manohar Publications. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185054551.
- ↑ Georges Kristoffel Lieten; Olga Nieuwenhuys; Loes Ch. Schenk-Sandbergen; Werkgemeenschap Zuid-Azië (1989). Women, migrants, and tribals: survival strategies in Asia. Manohar Publications. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185054773.
- ↑ Dhume, Anant Ramkrishna (1986). The cultural history of Goa from 10000 B.C.-1352 A.D.(see pages 53, 94, 83, 95)
- ↑ 4.0 4.1 ANTÓNIO JOSÉ SARAIVA (1985), Salomon, H. P. and Sassoon, I. S. D. (Translators, 2001), The Marrano Factory. The Portuguese Inquisition and Its New Christians, 1536–1765 (Brill Academic, 2001), pp. 345–353.
- ↑ Hannah Chapelle Wojciehowski (2011). Group Identity in the Renaissance World. Cambridge University Press. pp. 215–216 with footnotes 98–100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-00360-6.
- ↑ Gustav Henningsen; Marisa Rey-Henningsen (1979). Inquisition and Interdisciplinary History. Dansk folkemindesamling. p. 125.
- ↑ Maria Aurora Couto (2005). Goa: A Daughter's Story. Penguin Books. pp. 109–121, 128–131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5118-095-1.
- ↑ Augustine Kanjamala (2014). The Future of Christian Mission in India: Toward a New Paradigm for the Third Millennium. Wipf and Stock. pp. 165–166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-62032-315-1.
- ↑ Rao, Y.R. (2003). Tribal Tradition and Change: A Study of Kudubis of South India. Mangala Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788188685004.
- ↑ "Holi, Kerala style". தி இந்து. 2004-03-07. Archived from the original on 13 April 2004. பார்க்கப்பட்ட நாள் 6 May 2015.
நூல் ஆதாரங்கள்
தொகு- The Kurmis-Kunbis of India by Pratap Singh Velip Kankar. Published by Pritam Publishers PajiFord, Margoa, Goa Year −2006.
- 1956 An Introduction to the Study of Indian History (Popular Book Depot, Bombay) – D.D. Kosambi.
- Kudumbikalude Charithravum-Samskaravum – written by Dr. Vini M. Published by Sahithya Pravarthaka Cooperative Society, Kottayam, Kerala