குட்டி குஞ்சு தங்கச்சி
குட்டி குஞ்சு தங்கச்சி (Kutty Kunju Thankachi) என்று அறியப்படும் இலட்சுமி பிள்ளை (1820 பிப்ரவரி 14 - 1904 பிப்ரவரி 13) ஓர் இந்திய இசையமைப்பாளரும் மற்றும் மலையாள இலக்கிய எழுத்தாளரும் ஆவார். ஓமணத்திங்கள் கிடாவோ என்ற பிரபல மலையாளப் பாடலின் இசையமைப்பாளரும், சுவாதித் திருநாள் ராம வர்மனின் அரச சபையில் ஒரு இசைக்கலைஞருமான இரவிவர்மன் தம்பியின் மகளாவார். இவர் பார்வதி சுயம்வரம் மற்றும் மித்ரசகாமோச்சம் மற்றும் சிறீமதி சுயம்வரம் போன்ற பல ஆட்டகதைகளை எழுதியுள்ளார். மேலும் அஞ்ஞாதவாசம் என்ற நாடகத்தையும் எழுதியுள்ளார்..
குட்டி குஞ்சு தங்கச்சி | |
---|---|
பிறப்பு | இலட்சுமி பிள்ளை 14 பெப்ரவரி 1820 விளவங்கோடு வட்டம், திருவிதாங்கூர், இந்தியா |
இறப்பு | 13 பெப்ரவரி 1904 திருவிதாங்கூர் | (அகவை 83)
பணி | கவிஞர், நாடக ஆசிரியர், இசையமைப்பாளர் |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | குஞ்சன் தம்பன், குஞ்சுண்ணி தம்பன் |
பிள்ளைகள் | எட்டுக் குழந்தைகள் |
சுயசரிதை
தொகுகுட்டி குஞ்சு தங்கச்சி என்கிற இலட்சுமி பிள்ளை, 1820 பிப்ரவரி 14, அன்று திருவிதாங்கூர் மாநிலத்தின் தற்போது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு வட்டத்தில், இரவிவர்மன் தம்பி மற்றும் காளி பிள்ளை தங்கச்சி ஆகியோருக்கு பிறந்தார். [1] இவரது ஆரம்ப கல்வி இவரது தந்தையின் கீழ் இருந்தது; [note 1] இவர் ஹரிப்பாடு கொச்சுப்பிள்ளை வாரியரின் கீழ் படித்தார். இதே காலகட்டத்தில் தனது தந்தையிடமிருந்து திருவாதிரை நடனத்தையும் கற்றுக்கொண்டார். [3]
திருமணம்
தொகுஇவரது முதல் திருமணம் 1834 ஆம் ஆண்டில் சேர்த்தலை வாரணாடு நடுவிலேல் கோவிலகத்தைச் சேர்ந்த குஞ்சன் தம்பனுடன் நடந்தது. ஆனால் 1851 இல் தம்பன் இறந்த பிறகு, இவர் 1861 இல் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்; குஞ்சுன்னி தம்பனுடனான இரண்டாவது திருமணம் 1871 இல் அவர் இறக்கும் வரை ஒரு தசாப்தம் நீடித்தது. இவருக்கு இரண்டு திருமணங்களில் இருந்து எட்டு குழந்தைகள் இருந்தன. இவர் குழந்தை பருவத்திலிருந்தே கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 1902 வாக்கில் கண் பார்வையை முழுவதுமாக இழந்து 1904 பிப்ரவரி 13 அன்று தனது 83 வயதில் இறந்தார்.
மரபு
தொகுதங்கச்சி, கேரளாவின் முதல் பெண் கவிஞராகவும் [4] மற்றும் முதல் இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். [3] இவர், பார்வதி சுயம்வரம் மற்றும் மித்ரசகாமோச்சம் மற்றும் சிறீமதி சுயம்வரம் ஆகிய மூன்று ஆட்டகதைகள் உள்ளடக்கிய பதினெட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். [5] பல கவிதைகள், இரண்டு குறத்திப்பாடல்கள், ஒரு துள்ளல் மற்றும் அஞ்ஞாதவாசம் என்ற நாடகத்தையும் எழுதியுள்ளார். [6] புகழ்பெற்ற விமர்சகரான எஸ். குப்தன் நாயர், தங்கச்சி ஒரு காலத்தில் ஒரு கவிஞராக புகழ் பெற்றிருந்தார் என்றும், இவரது கருத்துக்களைக் கேட்கவும், இவரது கவிதைகளைப் படிக்கவும் மக்கள் ஆவலாக இருந்தனர் என்று கூறியுள்ளார். [7]
பாடல்கள்
தொகுசமசுகிருதத்தில் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்த இவர், காம்போதி, கல்யாணி, நாட்டை, கமாசு மற்றும் சுருட்டி போன்ற பல ராகங்களில் பாடல்களை இயற்றினார். [8] [9]
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi. 2019-04-05. Archived from the original on 2019-04-06. பார்க்கப்பட்ட நாள் 2019-04-05.
- ↑ "Composers - Irayimman Thampi ( 1782–1856)". ramyasspace (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
- ↑ 3.0 3.1 "KUTTIKUNJU THANGACHI The First Woman Composer in (the present day) kaRNATik tradition". carnatica.net. பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
- ↑ "Brehath Sangeetha Kendram - Kerala Composers". brehathsangeet.com. 2019-04-07. பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
- ↑ Santhosh, K. (2015-04-21). "Breathing life into Kutti Kunju Thankachi's play". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
- ↑ "List of works". Kerala Sahitya Akademi. 2019-04-05. Archived from the original on 2019-04-07. பார்க்கப்பட்ட நாள் 2019-04-05.
- ↑ "Women Writers of Kerala - Kuttykunju Thankachi". womenwritersofkerala.com. 2019-04-07. பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
- ↑ "Composers and Musicians Kutti Kunju Thankachi (1820-1904)". www.swathithirunal.in. பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
- ↑ "Carnatic Music in Kerala". www.keralaculture.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
மேலும் படிக்க
தொகு- Leela Omcheri (2014). Abhinaya Sangeetham. National Book Stall.
வெளி இணைப்புகள்
தொகு- "Portrait commissioned by Kerala Sahitya Akademi". Kerala Sahitya Akademi. 2019-04-05. Archived from the original on 2019-04-07. பார்க்கப்பட்ட நாள் 2019-04-05.
- Sharat Sunder Rajeev. "Tales from Travancore" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.