குந்தவை (எழுத்தாளர்)

(குந்தவை (சடாட்சரதேவி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குந்தவை என்ற புனைபெயருடன் எழுதும் சடாட்சரதேவி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் தொண்டைமானாறைச் சேர்ந்த ஈழத்து எழுத்தாளர். 1963 இல் ஆனந்தவிகடனில் வெளிவந்த ‘சிறுமைகண்டு பொங்குவாய்’ என்ற முத்திரைக்கதையுடன் எழுத்துலகத்திற்கு அறிமுகமானவர்.

குந்தவை (சடாட்சரதேவி)
பிறப்புதொண்டைமானாறு
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

கல்வி

தொகு

ஆரம்பக்கல்வியை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்திலும், இடைநிலைக்கல்வியை சுன்னாகம்இராமநாதன் கல்லூரியிலும் பெற்றார். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம்பெற்றார்.

புத்தளத்திலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இறுதியாக யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் பணியாற்றி 1990 ஆம் ஆண்டு விசேட சுயவிருப்பு ஓய்வுத்திட்டத்தின்கீழ் ஓய்வு பெற்றார்.

எழுத்துப்பணி

தொகு

இவரின் சிறுகதைகள் கணையாழி, அலை, கனவு, சரிநிகர், சக்தி, மூன்றாவது மனிதன் போன்ற பல இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன.

இவர் அறுபதுகளிலே எழுதத் தொடங்கி விட்டார். 1963 இல் ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த 'சிறுமை கண்டு பொங்குவாய்' என்ற சிறுகதையின் மூலம் இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர்.ஆனாலும் 2002 இல் தான் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான "யோகம் இருக்கிறது" வெளியானது.

பெற்ற கௌரவங்கள்

தொகு
  • குந்தவையின் 'பெயர்வு' என்ற சிறுகதை ஏ.ஜே கனகரட்னாவினால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது.
  • இவரது எழுத்துப்பணிக்காக வடமாகாண ஆளுநர் விருது 2008 இல் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

வெளிவந்த நூல்கள்

தொகு
  • யோகம் இருக்கிறது - சிறுகதைத் தொகுப்பு (மித்ர பதிப்பகம், சென்னை: 2002)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தவை_(எழுத்தாளர்)&oldid=3356087" இலிருந்து மீள்விக்கப்பட்டது