குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்

தமிழ்நாட்டின் உள்ள ஒரு சைவ ஆதீன மடம்
(குன்றக்குடி ஆதீனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குன்றக்குடி ஆதீனம் அல்லது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் (Tiruvannamalai Adheenam, or Kunnakudi Tiruvannamalai Mutt Adikam or Kunnakudi Adheenam) தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், குன்றக்குடியில் அமைந்த 500 ஆண்டு கால பழையான சைவ சித்தாந்த மடம் ஆகும். இம்மடத்தின் ஆதீனமாக இருந்தவர் புகழ்பெற்ற குன்றக்குடி அடிகள் ஆவார்.[1] குன்றக்குடி ஆதீனத்தின் 45 மடாதியாக இருந்த குன்றக்குடி அடிகள் 15 ஏப்ரல் 1995 அன்று முக்தி அடைந்த பின்னர், தற்போது குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் இந்த ஆதீனத்தின் 46வது மடாதியாக உள்ளார்.[2][3]

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
அமைவிடம்குன்றக்குடி, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூற்றுகள்10°06′48″N 78°41′55″E / 10.113372583490563°N 78.69868869325357°E / 10.113372583490563; 78.69868869325357
கட்டப்பட்டது16ஆம் நூற்றாண்டு
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் is located in தமிழ் நாடு
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்
தமிழ்நாட்டில் அமைவிடம்

வரலாறு

தொகு

இந்த ஆதீனம் தமிழகத்தில் சைவமும் தமிழும் ஒருங்கே வளர்க்க கட்டமைக்கப்பட்ட பக்தி இலக்கிய கால ஆதீனங்களில் முதன்மையானது ஆகும். இவ்வாதீனம் பொ.ஊ. 11ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் நிறுவப்பட்டது ஆகும். பொ.ஊ. 19ம் நூற்றாண்டில் இராமேசுவரத்திற்கு வந்த திருவண்ணாமலை ஆதீன குருமாகசன்னிதானத்தை இராமநாதபுர சேதுபதி மன்னர் கேட்டுக்கொண்டதின் பெயரில் அப்பொழுதில் இருந்து காரைக்குடி அருகில் உள்ள குன்றக்குடியில் நிறுவப்பட்டு, இன்றுவரை அங்கேயே திகழ்ந்து வருகிறது.[4] வேளாள மரபில் இந்த அதீனம், மயிலம் பொம்மபுர ஆதீனத்தோடு துளுவ வேளாளர் பிரிவினர்க்கு பாத்தியப்பட்டது ஆகும்.

சமூக சீர்த்திருத்தம்

தொகு

திருவண்ணாமலை ஆதீனத்தின் மறைந்த குருமகாசந்நிதானம் குன்றக்குடி அடிகளார் அவர்கள், சமூக சீர்த்திருத்தர் தந்தை பெரியார் அவர்களோடு இணக்கமான நட்புடன் பழகியவர். மக்களிடம் புரையோடிய சாதி இருக்கங்களையும், மூட நம்பிக்கைகளையும் நீக்க அரும்பாடுபட்டவர்.

அருகில் அமைந்த இடங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The atheist and the saint". The Hindu (in Indian English). 2016-09-16. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
  2. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்: 695-வது மகா குரு பூசை விழா
  3. குன்றக்குடி ஆதீன வரலாறு
  4. Monasteries in South India .P.21.Swami Swahananda