குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் என்ற குன்றத்தூர் முருகன் கோயில் என்பது சென்னையின் புறநகர் பகுதியான காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இக்கோயில் கௌமாரத்தின் முழுமுதற் கடவுளான முருகனுக்கு உரிதான கோவிலாகும்.
குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் | |
---|---|
வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
அமைவு: | குன்றத்தூர் |
ஆள்கூறுகள்: | 12°59′51″N 80°05′48″E / 12.9974°N 80.0966°E |
கோயில் தகவல்கள் |
தலபுராணம்
தொகுஇந்து சமய தொன்மத்தின்படி முருகப்பெருமான் திருப்போரூரில் இருந்து திருத்தணிக்கு தனது பயணத்தின்போது இம்மலையில் தங்கினார் என கூறப்படுகிறது.
வரலாறு
தொகுஇக்கோயில் பொ.ஊ. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. 1726-ஆம் ஆண்டில் மதுரை நாயக்கரால் மேம்படுத்தப்பட்டது. குன்றத்தூர் முருகன் கோயில் சுமார் 900 ஆண்டுகளாகப் பக்தர்களால் வழிபடுவதாக கூறப்படுகிறது.
கோவிலின் சிறப்புகள்
தொகுஇது 84 படிகள் கொண்ட மலைக்கோவில். மூலவர் வட திசையைப் பார்த்து உள்ளார்.
கோவில் அமைப்பு
தொகுஇக்கோயிலின் கருவறையில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் உள்ளார். முருகப்பெருமான் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. கோவிலின் பிரகாரத்தில் காசி விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், நாகர், நவக்கிரக சன்னிதிகள் ஆகியவை அமைந்துள்ளன.
மண்டபத்தின் ஓரத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் நாகலிங்கேஸ்வரர் சந்நிதி உள்ளது.
நேர்த்திக்கடன்
தொகு- அரச மரத்தில் தொட்டில் கட்டி பிராத்தனை.
- குழந்தையின் எடைக்கு எடை பழம், சர்க்கரை, வெல்லம் அளித்தல்.
கந்தழீஸ்வரர்
தொகுகுன்றத்தூர் மலையில் இருந்த முருகப்பெருமான், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார். மலை அடிவாரத்தில் தனி கோவிலில் ‘கந்தழீஸ்வரர்’ உள்ளார்.[2]
மேற்கோள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-24. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.
- ↑ மலர், மாலை (5 ஜன., 2017). "திருமண வாழ்க்கை அருளும் குன்றத்தூர் முருகன் கோவில்". Maalaimalar.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
படத்தொகுப்பு
தொகு-
மலைமீது கோயில்
-
நுழைவாயில்
-
முன் மண்டபம்
-
திருச்சுற்றுடன் முன்மண்டபம்
-
இறங்கும்போது நுழைவாயில் தோற்றம்