குப்பநத்தம், விருத்தாசலம் வட்டம்

குப்பநத்தம் (ஆங்கிலம் : Kuppanatham) என்பது கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்[4]. இது விருத்தாசலத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. இந்திய அரசின் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குப்பநத்தம் கிராமத்தில் 998 வீடுகள் உள்ளன. மேலும் இக்கிராமத்தில் 4,025 மக்களும் அதில் 2.053 ஆண்களும் 1972 பெண்களும் அடங்குவர்.

குப்பநத்தம்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


தொழில் தொகு

குப்பநத்தம் கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக கருதப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 472 பேர் விவசாயத்தை முழு நேரமாக மேற்கொள்கின்றனர். இதில் 394 ஆண்களும் 78 பெண்களும் அடங்குவர். மேலும் 1,313 பேர் விவசாயத்தை பகுதி நேரமாக மேற்கொள்கின்றனர். இதில் 520 ஆண்களும் 793 பெண்களும் அடங்குவர். இதர வேலை செய்பவர்கள் 327 பேர் உள்ளனர்.

கல்வியறிவு தொகு

குப்பநத்தம் கிராமம் கல்வியறிவில் முன்னேறும் கிராமமாக உள்ளது. 2011-ஆம் கணக்கெடுப்பின்படி, இக்கிராமத்தில் 2,650 கல்வியறிவு பெற்றுள்ளனர். இதில் 1,563 ஆண்களும் 1,087 பெண்களும் அடங்குவர். இந்த கிராமத்தில் 1,375 பேர் படிப்பறிவு பெறாமல் உள்ளனர். இதில் 490 ஆண்களும் 885 பெண்களும் உள்ளனர். மேற்கண்ட வகையில் பார்க்கும் போது படிப்பறிவு பெற்றவர்கள் அதிகமாக உள்ளனர். இங்குள்ளவர்கள் கீழ்நிலைக்கல்வியை சொந்த கிராமத்திலேயும், மேல்நிலைக்கல்வியை விருத்தாசலத்திலோ அல்லது மற்ற நகரங்களிலோ கற்கின்றனர். இந்த கிராமத்திற்கு மிக அருகாமையில் திரு.கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி இடம்பெற்றுள்ளது.

வர்த்தகம் தொகு

குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ அருகிலுள்ள விருத்தாசலம் நகரத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.

போக்குவரத்து தொகு

குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். பேருந்து மூலம் தொலைதூரத்திற்கு செல்ல விருத்தாசலம் நகரத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.

அருகாமையிலுள்ள உள்ள ஊர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-30. பார்க்கப்பட்ட நாள் 2015-06-22.