குப்பி தோடதப்பா

ராவ் பகதூர் "தர்ம்ப்பிரவர்த்தா" குப்பி தோட்டதப்பா (கன்னடம்:ರಾವ್ ಬಹದ್ದೂರ್ ಧರ್ಮಪ್ರವರ್ತ, 1838-1910), பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கருநாடகத்தின் முன்னாள் மைசூர் அரசுப்பகுதியில், (தற்போதைய கருநாடகம் ) வாழ்ந்திருந்த பெருவணிகரும் வள்ளலும் ஆவார்.[1] இவர் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக "தோட்டதப்பா சத்திரம்" என்ற கட்டணமில்லா தங்குவிடுதியை நிறுவியதற்காக பெரிதும் அறியப்படுகிறார்.[1] இவரது கொடைத்தன்மைக்காக மைசூர் மகாராசா நான்காம் கிருட்டிணராச உடையார் "தர்மப்பிரவர்த்தா" (அறங்காவலர்) என்ற பட்டத்தை அளித்துள்ளார்; பிரித்தானிய அரசு இவருக்கு "ராவ் பகதூர்" என்ற சிறப்பை வழங்கியுள்ளது.[1]

இராவ் பகதூர் தர்மப்பிரவர்த்தா
குப்பி தோடதப்பா
Gubbi Thotadappa.jpg
தனிநபர் தகவல்
பிறப்பு 1838
குப்பி, தும்கூர், மைசூர் அரசு (தற்போதைய கருநாடகம்)
இறப்பு 1910
பெங்களூர்
தேசியம் இந்தியர்
வாழ்க்கை துணைவர்(கள்) கௌரம்மா
பணி வள்ளல், அறக்கட்டளை நிறுவனர்
தொழில் வணிகர்
குப்பி தோட்டதப்பா நிறுவிய அறக்கட்டளை

இளமைக்காலம்தொகு

தோட்டதப்பா 1838ஆம் ஆண்டில் தும்கூரின் குப்பி நகரில் வீர சைவக் குடும்பத்தில் பிறந்தார். பிற்காலத்தில் இவரது குடும்பம் பெங்களூருவிற்கு குடிபெயர்ந்தது. அங்கு மாமுல்பேட்டையில் தமது வணிக முயற்சியைத் துவங்கினார்.

சமூக சேவைதொகு

 
அவர் நிறுவிய அறக்கட்டளையின் வாயிலிலுள்ள சிலை

குழந்தைகள் இல்லாத தோட்டதப்பா தமது செல்வமனைத்தையும் சுற்றுலப் பயணிகளுக்கும் மாணவர்களுக்கும் பயன்பட வேண்டும் என முடிவு செய்தார். இந்த நோக்கத்துடன் இராவ்பகதூர் தர்மப்பிரவர்த்த குப்பி தோட்டதப்பா அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை மூலம் 1897இல் பெங்களூர் நகரத் தொடருந்து நிலையத்தின் அண்மையில் நிலம் வாங்கி தங்குவிடுதி கட்டத்தொடங்கியது. பெப்ரவரி 11, 1903இல் பயணிகளுக்கான கட்டணமில்லா தங்குவிடுதியையும் மாணவர்களுக்கான கட்டணமில்லா மாணவர்விடுதியையும் உள்ளடக்கிய புதிய கட்டிடத்தை மைசூர் மகாராசா நான்காம் கிருட்டிணராசா உடையார் திறந்து வைத்தார்.[2] தமது செல்வமனைத்தையும் இந்த அறக்கட்டளைக்கே எழுதிவைத்து கே. பி. புட்டண்ணச் செட்டியை அறக்கட்டளையின் முதல் தலைவராக நியமித்தார். இன்றுவரை இந்த அறக்கட்டளைத் தன் சேவையை வழங்கி வருகின்றது. மாணவர்களுக்கான கட்டணமில்லா விடுதி வசதி கருநாடக மாநிலத்தின் அனைவருக்கும் விரிவாக்கப்பட்டது. 2005இல் இந்த விடுதி புதுப்பிக்கப்பட்டது. தனது நூற்றாண்டு விழாவின் போது அறக்கட்டளை வருமானம் ஈட்ட கெம்பகௌடா பேருந்து நிலையம் அருகே பெல் ஓட்டல் என்ற தங்குவிடுதியை வணிக நோக்கில் கட்டியுள்ளது. இங்கு நியாயமான கட்டணத்தில் அனைவருக்கும், சாதி,இனம், சமயப் பாகுபாடின்றி தங்கும் வசதி அளிக்கப்படுகிறது.[2] ஆனால் மாணவர்களுக்கான விடுதி வீர சைவ மாணவர்களுக்கே வழங்கப்படுகின்றது. இந்நாள்வரை அறக்கட்டளை எந்தவொரு அரசு நல்கைகளையும் பெறவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்த அறக்கட்டளை தகுதியான வீர சைவ மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கி வருகின்றது.[3]

பெருமை விருதுகள்தொகு

இறப்புதொகு

பெப்ரவரி 21, 1910இல் தமது 72ஆம் அகவையில் தோட்டதப்பா மரணமடைந்தார்.

தாக்கங்கள்தொகு

  • 1927-1930 தோட்டத்தப்பா மாணவர் விடுதியில் முனைவர். சிவகுமார சுவாமி தங்கியிருந்துள்ளார்.
  • எஸ். நிஜலிங்கப்பா, கருநாடக மாநிலத்தின் நான்காம் முதலமைச்சர், 1921-1924 ஆண்டுகளில் மாணவர் விடுதியில் தங்கிப் படித்துள்ளார்.
  • பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம் முற்புறமுள்ள சாலை இவரது நினைவைப் போற்றி "குப்பி தோட்டதப்பா சாலை" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 Divya Sreedharan. "For now, this old shelter". Online Edition of the Hindu, dated 2 February 2003. 2003, the Hindu. 30 ஆகஸ்ட் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 August 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. 2.0 2.1 Y Maheswara Reddy. "A model for sustainable charity". the Indian express, dated 6 December 2011. 2011, the newindianexpress. 28 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. Staff Reporter. "Applications invited". Online Edition of the Hindu, dated 23 September 2012. 2012, The Hindu. 28 August 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்பி_தோடதப்பா&oldid=3336181" இருந்து மீள்விக்கப்பட்டது