குப்பி (திரைப்படம்)

2007 ஆண்டைய திரைப்படம்

குப்பி (கன்னடம்: ಸೈನೈಡ್), எனபது ஒரு 2007 ஆண்டைய தமிழ்த் திரைப்படமாகும். இதனை எழுதி இயக்கியவர் ஏ.எம் . ஆர். ரமேஷ் ஆவார். இத்திரைப்படத்தை சயனைட் என்ற பெயரில் இவர் 2006 ஆண்டு கன்டத்தில் இயக்கினார். இப்படத்தின் கதை பெங்களூரைச் சுற்றி 1 ஆகத்து முதல் 20 ஆகத்து 1991 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு நடக்கும் சம்பவங்களை சித்தரித்து எடுக்கப்பட்டது ஆகும்.[1] இக்கதை கொலையாளிகள் பெங்களூருக்கு வருவதிலிருந்து துவங்குகிறது, பெங்களூரில் ரங்கநாத்தின் உதவியுடன் அடைக்கலமாதல் வீட்டை வாடகைக்கு பிடித்து தங்குதல் போலீசார் சுற்றி வளைத்தல் இறுதியில் தற்கொலை செய்து கொள்ளல் என கதை முடிகிறது. இப்படத்தில் ரவி காலே சிவராசனாக நடித்துள்ளார், மேலும். மாளவிகா அவினாஷ், தாரா, ரங்கயனா ரகு ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களிலும், துணைப் பாத்திரங்களில் அவினாஷ், நாசர் சுரேஷ் அபிகார் போன்றோர் நடித்துள்ளனர்.

குப்பி
ಸೈನೈಡ್
இயக்கம்ஏ. எம். ஆர். ரமேஷ்
தயாரிப்புபி. கென்சப்பா கௌடா
எஸ். இந்துமதி
திரைக்கதைஏ. எம். ஆர். ரமேஷ்
கதைசொல்லிபிரகாஷ் ராஜ்
இசைசந்தீப் சௌடா
நடிப்புரவி கலே
ரங்கயனா ரகு
மாளவிகா அவினாஷ்
தாரா
அவினாஷ்
ஒளிப்பதிவுஆர். ரத்னவேலு
படத்தொகுப்புஅந்தோணி
கலையகம்அக்சயா கிரியேசன்ஸ்
விநியோகம்ஹல்ப்பா கிரியேசன்ஸ்
வெளியீடு6 ஏப்ரல் 2006 (2006-04-06) (Tamil)
7 சூலை 2006 (2006-07-07) (Kannada)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்
தமிழ்

7 ஜூலை 2006 அன்று கன்னடத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படம் பரவலான பாராட்டையும் பெற்றது. படத்தின் கதை விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. நடிகர்கள் ரவி காலே, ரங்கயானா ரகு, தாரா, மாளவிகா அவினாஷ் ஆகியோரின் நடிப்பு , மற்றும் படத்தின் ஓளிப்பதிவு பணிகள் மற்றும் படத்தொகுப்பு ஆகியவையும் பாராட்டப்பட்டன. 2006–07 ஆண்டு கர்நாடக மாநில திரைப்பட விருதுகளில் இரண்டு விருதுகளாக — மூன்றாவது சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகை (தாரா) ஆகியவற்றை பெற்றது. கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ரங்கநாத் பாத்திரத்தை சித்தரித்து நடித்த, ரகு சிறந்த துணை நடிகருக்கான விருது, 54 வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் வழங்கப்பட்டது.[2][3] இந்தப் படம் கன்னடத்தில் எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் ஒன்றாக சில விமர்சகர்களால் கருதப்படுகிறது.[4]

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "The detoxifying effect". The Hindu. 7 July 2006. பார்க்கப்பட்ட நாள் 8 July 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |newspaper= (help)
  2. "Karnataka State Film Awards 2006-07". kannadamoviesinfo.wordpress.com. பார்க்கப்பட்ட நாள் 8 July 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. "2007 Filmfare Awards South". awardsandwinners.com. பார்க்கப்பட்ட நாள் 8 July 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  4. "Cyanide: Deserves much applause". rediff.com. 10 July 2006. பார்க்கப்பட்ட நாள் 8 July 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்பி_(திரைப்படம்)&oldid=3954327" இலிருந்து மீள்விக்கப்பட்டது