குமாரசாமி தேசிகர்

குமாரசாமி தேசிகர்(1711-1810) தென்னிந்தியாவில் தமிழகத்திலுள்ள தொண்டை மண்டலம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாநகரில் 17-ஆம் நூற்றாண்டில் மரபுவழி சைவ தமிழ் (தேசிகர்) குடும்பத்தில் 8 அக்டோபர் 1711-ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்ட வீரசைவ மதத் தலைவராகத் திகழ்ந்தார். தொண்டைமண்டலத்தில் உள்ள மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அர்ச்சகர் மற்றும் தீட்சிதராகப் பணிபுரிந்தார் [1]

வாழ்க்கை வரலாறுதொகு

குமாரசாமி தேசிகர் தனது இளமைக்காலத்தில் துறவறம் செல்ல ஆசைப்பட்டு தனது குடும்பத்தை விட்டுவிட்டு சீடர்களுடன் திருவண்ணாமலை சென்றார். ஆனால் கடவுளருளால் அவர் தங்கம்மாள் என்பவருடன் இல்லறம் புகுந்து சிவப்பிரகாசர், வேலையர், கருணைப்பிரகாசர் ஆகிய மூன்று மகன்களையும், ஞானாம்பிகை என்ற மகளையும் பெற்றார். மக்களின் கல்விப் பருவத்திலேயே, குமாரசாமி தேசிகர் இறந்தார். மூன்று புத்தகங்களுக்கு மேலாகத் தனது வாழ்நாளில் தொகுத்துள்ளார். தந்தையாரைப் பின்பற்றி அவரது மகன்கள் மூவரும் சைவ, கிறிஸ்தவ மதத்தின் மூலமாகத் தமிழ் தொண்டாற்றியுள்ளனர்.

குடும்பம்தொகு

இவரின் மூத்த மகனான சிவப்பிரகாசர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எனும் இயற்பெயர் கொண்ட சிற்றிலக்கியப் புலவர். "கற்பனைக் களஞ்சியம்" என்றும் சிவப்பிரகாசர் அழைக்கப்படுகிறார். இவர், "கவி சார்வ பெளமா", "நன்னெறி சிவப்பிரகாசர்", "துறைமங்கலம சிவப்பிரகாசர்" என்று பலவாறாக அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சைவ வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான சம்பந்தர், சுந்தரர், அப்பர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் "நால்வர் நான்மணி மாலை" என்ற கவிதை நூலை இவர் எழுதினார். இவர் கீழ்க்கண்ட சைவ சமயச் சார்புள்ள நூல்களை இயற்றியுள்ளார். திருச்செந்தூர் நீரோட்டக யமக அந்தாதி (உதடு ஒட்டாமல் பாடப்படும் ஒருவகை பா வகை -31 பாடல்கள்), திருவெங்கை உலா, திருவெங்கை அலங்காரம், நால்வர் நான்மணி மாலை, சிவப்பிரகாச விகாசம், தருக்கப்பரிபாஷை, சதமணி மாலை, வேதாந்த சூடாமணி, சிந்தாந்த சிகாமணி, பிரபுலிங்க லீலை, பழமலை அந்தாதி, பிட்சாடண நவமணி மாலை, கொச்சக கலிப்பா, பெரியநாயகி அம்மை கட்டளைக் கலித்துறை, சிவநாம மகிமை, இஷ்டலிங்க அபிஷேக மாலை, நெடுங்கழி நெடில், குறுங்கழி நெடில், நிரஞ்சன மாலை, கைத்தல மாலை, சோனசைல மாலை, சீகாளத்திப் புராணம், திருவைங்கை கோவை, நெஞ்சுவிடு தூது, சிவஞான பாலையர் மற்றும் திருக்கூவ புராணம்[2][3]

புதுச்சேரி அருகில் உள்ள நல்லாற்றூர் எனும் ஊரில் தனது 32-ஆம் வயதில் இறந்தார். ,[4][5]

குமார சுவாமி தேசிகர் அவர்களின் ஒரே குமாரத்தி ஞானாம்பிகை, போருர் சாந்தலிங்க சுவாமிகள் அவர்களை மணம் புரிந்து விழுப்புரம் மாவட்டம் மயிலையில் வாழ்ந்து இயற்கை எய்தினார்.[6]

அவரது இரண்டாம் மகனான கருணை பிரகாசர் "சீகாளத்திப் புராணம்" "இஷ்டலிங்க அகவல்" போன்று ஐந்து நூல்களை இயற்றியுள்ளார். தனது பதினாறாவது வயதில் "காமாட்சி" என்பவரை மணம் முடித்த அவர் பதினெட்டாம் வயதில் நாகப்பட்டினத்தில் உள்ள திருவேங்கையில் இறந்தார்.

குக நமச்சிவாய தேசிகரைப் பற்றிய குருநமச்சிவாய லீலை, கிரிஷ்னனண் பற்றிய பாரிவாத லீலை, கும்பகோன சாரங்க தேவரைப் பற்றிய வீரசிங்காதன புராணம், மயிலை இரட்டைமணிமாலை, மயிலத்துலா, நல்லூர் என்ற வழங்குகின்ற வில்வாரண்ய ஸ்தலபுராணம், திருவைகாவூர்ப் புராணம், இஷ்டலிங்க கைத்தல மாலை போன்ற பல நூல்களை இயற்றியவர் குமாரசாமி தேசிகரின் கடைசி மகனான வேலைய தேசிகர் ஆவார்.

வேலைய தேசிகர் மீனாட்சி அம்மாளுடனான திருமணத்திற்குப் பின்பு மயிலம் பொம்மபுர ஆதீனம் அருகிலுள்ள மயிலம் என்ற ஊரில் வசித்து வந்தார். இவர் எழுபத்து இரண்டு வயதில் பெருமாத்தூரில் இறந்தார்.

குமாரசாமி தேசிகரின் மற்ற இரு குமாரர்களுக்கும் ஒரு குமாரத்திக்கும் குழந்தைப்பேறு இல்லை. மாறாக வேலையருக்குச் சுந்தரேசனார் என்ற மகனும் அந்த மகனுக்குக் கற்பகாம்பாள் என்ற மனைவியின் மூலமாகச் சுவாமிதாச தேசிகர் என்ற மகனுமாகச் சந்ததி தொடர்ந்தது.

சுவாமிதாச தேசிகர் பிற்காலத்தில் கிறித்தவ மதத்திற்கு மாறி சூசை [7] எனத் தனது பெயரை மாற்றித் தமிழ் தொண்டாற்றினார். இவரது மகன்கள், பேரன்கள் என அனைவரும் தமிழ் இலக்கியத்திற்குக் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றியுள்ளனர்

மேற்கோள்கள்தொகு

  1.  http://swaminathadesiar.blogspot.com
  2. https://www.scribd.com/doc/88685765/ME-A-BOAT#fullscreen
  3. மு.அருணாச்சலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை:தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 214
  4. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2015-04-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2015-03-29.
  5. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2012-02-13 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-04-18.
  6. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2012-01-06 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-04-18.
  7. http://meaboat.blogspot.in/2012/02/naan-ungal-thoni-pdf.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரசாமி_தேசிகர்&oldid=3281338" இருந்து மீள்விக்கப்பட்டது