குமார் சுரேஷ் சிங்

மானுடவியல் ஆய்வாளர்

குமார் சுரேஷ் சிங் (Kumar Suresh Singh) (1935-2006) பொதுவாக கே. எஸ். சிங் என்று அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார். இவர் சோட்டாநாக்பூரின் ஆணையராகவும் (1978-80) மற்றும் இந்திய மானுடவியல் ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் முக்கியமாக இந்திய மக்கள் பற்றிய கணக்கெடுப்பின் மேற்பார்வை மற்றும் தொகுத்தல் பாணிக்காகவும் மற்றும் பழங்குடி வரலாறு பற்றிய ஆய்வுகளுக்காகவும் அறியப்படுகிறார்.

வாழ்க்கை

தொகு

குமார் சுரேஷ் சிங் , பிற்படுத்தப்பட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தவர். பீகாரில் உள்ள முங்கேரில் வளர்ந்தார். பாட்னா பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு படித்தார். பின்னர் முதுகலைப் பட்டம் பெற்றார். இறுதியாக புரட்சியாளர் பிர்சா முண்டா என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.

இவர் 1958 இல் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1965-1968 காலகட்டத்தை சோட்டாநாக்பூர் பகுதியில் உள்ள பலாமூவில் துணை ஆணையராகப் பணி புரிந்தார். இந்த சமயத்தில் ஏற்பட்ட இந்தியப் பஞ்சத்தில் பீகாரில் நிவாரணப் பணிகளை ஒழுங்கமைக்க உதவினார். [1]

பின்னர், சிங் சோட்டாநாக்பூருக்கு 1978-1980 ஆணையராக மீண்டும் பணியேற்றார். 1984 ஆம் ஆண்டில் இவர் இந்திய மானுடவியல் ஆய்வகத்தில் தலைமை இயக்குநராகவும் , போபாலில் உள்ள இந்திரா காந்தி ராட்டிரிய மானவ் சங்கராலயாவின் (மனிதகுலத்தின் தேசிய அருங்காட்சியகம்) இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். [1]

சிங் 1993 இல்இந்திய மானுடவியல் ஆய்வகத்தின் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும், இவர் 20 மே 2006 இல் இறக்கும் வரை பீப்பிள் ஆஃப் இந்தியா தொடரின் பொது ஆசிரியராக இருந்தார். தான் இறப்பதற்கு சற்று முன்பு இறுதி தொகுதியை முடித்தார். இவர் இறக்கும் போது இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் தேசிய உறுப்பினராக இருந்தார். [2] [1]

பழங்குடியினர் ஆய்வுகள்

தொகு

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் பிரச்சாரத்தின் தலைவரான பிர்சா முண்டாவைப் பற்றி சிங் ஒரு ஆய்வறிக்கையை எழுதினார். இதைச் செய்ய, பீகாரின் சார்க்கண்டு பகுதியின் பழங்குடியின மக்களால் கூறப்பட்டுவந்த நாட்டுப்புறக் கதைகள் மற்றும் பிற வாய்வழி வரலாற்றை இவர் கணிசமாக நம்ப வேண்டியிருந்தது. மொத்தத்தில் இவர் 15 ஆண்டுகள் களப்பணிகளை மேற்கொண்டார். தாமோதர் தர்மானந்தா கோசாம்பியை முதன்மையான துணை வரலாற்றாசிரியர் என்று கருதினாலும், குமார் சுரேஷ் சிங் சிங்கும் குறிப்பிடத்தக்க வரலாற்றாசிரியராக இருந்துள்ளார். இவர் பழங்குடியின வரலாற்றில் பிற படைப்புகளையும் உருவாக்கினார். [1]

இந்திய மக்கள்

தொகு

இந்தியாவில் உள்ள அனைத்து சமூகங்களுக்கிடையிலான வேறுபாடுகள் மற்றும் இணைப்புகள் பற்றிய மானுடவியல் ஆய்வாகக் கருதப்பட்ட இந்திய மக்கள் கணக்கெடுப்பின் அமைப்பு, தொகுத்தல் மற்றும் மேற்பார்வை ஆகியவற்றுக்கான பொறுப்பு இவரிடம் வழங்கப்பட்டது . அக்டோபர் 1985 மற்றும் 1994 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 470 அறிஞர்களை உள்ளடக்கிய இந்த கணக்கெடுப்பில் 4694 சமூகங்கள் அடையாளம் காணப்பட்டன. இதில் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளில் ஈடுபட்டவர்களும் உள்ளனர். கணக்கெடுப்பின் முழு முடிவுகளும் வெளியிடப்பட்ட 43 தொகுதிகளை நிரப்புகின்றன, அவற்றில் 12 சிங் இறந்த நேரத்தில் தயாரிக்கப்பட்டவை [1]

இதனையும் காண்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Sinha, A. K. (January 2007). "Obituary: Kumar Suresh Singh (1935–2006)". Indian Historical Review 34 (1): 365–368. doi:10.1177/037698360703400136. (subscription required)
  2. . 

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமார்_சுரேஷ்_சிங்&oldid=4142862" இலிருந்து மீள்விக்கப்பட்டது