இந்திய மானிடவியல் ஆய்வகம்

இந்திய மானிடவியல் ஆய்வகம் (Anthropological Survey of India (AnSI) மனிதப் பண்பாட்டு மானிடவியல் ஆய்வுகள் மற்றும் கள தரவு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள இந்திய அரசின் உயர்ந்த அமைப்பாகும். இது முதன்மையாக உடல்சார் மானிடவியல் மற்றும் பண்பாட்டு மானிடவியல் துறைகளில் செயல்படுகிறது.[1] மேலும் இந்திய மானுடவியில ஆய்வகம், இந்தியப் பழங்குடியின மக்கள் மீது வலுவான கவனம் செலுத்துவதுடன், பிற சமூகங்கள் மற்றும் சமயக் குழுக்களின் பண்பாடுகள் மற்றும் மானிடவியல்சார் மொழிகளையும் ஆவணப்படுத்துகிறது.இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மானுடவியில ஆய்வகத்தின் தலைமையிடம் கொல்கத்தா இந்திய அருங்காட்சியக வளாகத்தில் 1948 ஆண்டு முதல் இயங்குகிறது.[2]

இந்திய மானிடவியல் ஆய்வகம்
இந்திய மானிடவியல் ஆய்வகத்தின் தலைமையிடம், இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா
சுருக்கம்AnSI
துவங்கியது1945
வகைஇந்திய அரசு அமைப்பு
தலைமையகம்கொல்கத்தா
அலுவல் மொழிகள்ஆங்கிலம், இந்தி
இயக்குநர்வி. கே. சிறீவஸ்தவா
வலைத்தளம்ansi.gov.in

வரலாறு

தொகு

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் 1916- ஆம் ஆண்டு முதல் இந்திய அருங்காட்சியகத்தின் ஒரு பிரிவாக விலங்கின மற்றும் மானுடவியல் ஆய்வகம் செயல்பட்டது. பின்னர் இந்திய விலங்கின ஆய்வகம் தனியாக செயல்படத் துவங்கியது. 1945-இல் மானுடவியல் ஆய்வகம் தன்னாட்சி அமைப்பாக துவக்கப்பட்டது.[3] இதன் முதல் இயக்குநராக வீரஜா சங்கர் குகாவும், துணை இயக்குநராக வெரியர் எல்வினும் இருந்தனர். இதன் கிளை ஒன்று அந்தமான் நிக்கோபர் தீவுகளின் தலைமையிடமான போர்ட் பிளையர், சில்லாங், தேராதூன், உதய்பூர், நாக்பூர் மற்றும் மைசூரில் நூலகத்துடன் 1960 முதல் இயங்குகிறது.[4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Anthropological Survey of India பரணிடப்பட்டது 25 சூன் 2010 at the வந்தவழி இயந்திரம் Department of Education. Govt. of India.
  2. "Anthropological Survey of India history at anthsi.com". Archived from the original on 11 March 2010. பார்க்கப்பட்ட நாள் 19 May 2010.
  3. Anthropological Survey of India பரணிடப்பட்டது 2006-05-25 at the வந்தவழி இயந்திரம் (The Andamanese by George Weber).
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 22 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகஸ்ட் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help) Swedish South Asian Studies Network, Lund University, 28 November 2007.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு