குமுட்டிக் கீரை

குமுட்டிக் கீரை அல்லது காமாட்சிக்கீரை (Allmania nodiflora[1], ஆல்மேனியா நோடிஃப்ளோரா) [2] என்பது கார்ல் வான் லின்னயசு என்பவரால் முதன்முதலில் விவரிக்கப்பட்ட அமராந்தேசியே தாவரமாகும். மேலும் இதன் தற்போதைய பெயரை இராபர்ட் பிரவுனும், இராபர்ட் வைட் வழங்கியுள்ளனர். இவ்வினம் ஆல்மேனிய பேரினத்தினைக் குறிக்கிறது. இப்பேரினம் அமராந்தேசியே என்ற குடும்பத்தின் ஒரு பகுதியாகும்.[3] [2] நோய் எதிர்ப்புத் திறனை தரும் கீரையென நம்பப்படுகிறது.[4]

வளரியல்புகள்

தொகு

இது தரைபடர் செடி ஆகும். இதில் இருவகைத் தாவரங்கள் உள்ளன. அதிக நீர் கிடைக்கும் பகுதியில் உள்ள இடத்தில் வளரும் தாவரத்தின் பூக்கள் பச்சை நிறத்திலும், நீர் பிடிப்பு குறைவாக உள்ள இடத்தில் வளரும் இதே இனம் சிவப்பு நிற மலர்களையும் தரும் இயல்பைப் பெற்றிருக்கிறது. இரு நிறத்திலும் பூக்கள் பந்து போல, உருண்டையாக இருக்கிறது.

படத்தொகுப்பு

தொகு

இதையும் காணவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Allmania nodiflora". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச்சு 2024.
    "Allmania nodiflora". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச்சு 2024.
  2. 2.0 2.1 Wight, R., 1834Illustrations of Indian botany; principally of the southern parts of the peninsula. (Continued from p. 67).
  3. url=http://www.catalogueoflife.org/annual-checklist/2014/details/species/id/16326955%7Ctitel=Species 2000 & ITIS Catalogue of Life: 2014 Annual Checklist.|hämtdatum=26 May 2014|författare=Roskov Y., Kunze T., Orrell T., Abucay L., Paglinawan L., Culham A., Bailly N., Kirk P., Bourgoin T., Baillargeon G., Decock W., De Wever A., Didžiulis V. (ed)|datum=2014|verk=|utgivare=Species 2000: Reading, UK.
  4. https://www.healthnorganicstamil.com/kumuti-keerai-benefits-and-uses-in-tamil-allmania-nodiflora-in-tamil-immunity-booster-kumati-keerai/

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Allmania nodiflora
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுட்டிக்_கீரை&oldid=3914917" இலிருந்து மீள்விக்கப்பட்டது