குமைல் நஞ்சியானி

பாக்கித்தானிய நடிகர்

குமைல் அலி நஞ்சியானி (ஆங்கில மொழி: Kumail Ali Nanjiani) (பிறப்பு: மே 2, 1978)[1] என்பவர் பாக்கித்தானிய நாட்டு நடிகர், நகைச்சுவையாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் எச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சிலிக்கான் வேலே' (2014–2019) என்ற நகைச்சுவைத் தொடரில் தினேஷ் என்ற பாத்திரத்திற்காகவும், 'தி பிக் சிக்' (2017)[2] என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் இணைந்து எழுதி நடித்ததற்காகவும் அறியப்படுகிறார். இந்த திரைப்படத்தில் இவரது மனைவி எமிலி வி.கோர்டனுடன்[3] இணைந்து எழுதியதற்காக, சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[4][5] இவரை 2018 ஆம் ஆண்டில் டைம் இதழ் உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக பட்டியலிட்டது.[6]

குமைல் நஞ்சியானி
Kumail Nanjiani by Gage Skidmore 2.jpg
பிறப்புகுமைல் அலி நஞ்சியானி
மே 2, 1978 (1978-05-02) (அகவை 45)
கராச்சி, சிந்து மாகாணம், பாக்கித்தான்
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், நகைச்சுவையாளர், திரைக்கதை எழுத்தாளர், வலையொலி
செயற்பாட்டுக்
காலம்
2008–present
வாழ்க்கைத்
துணை
எமிலி வி. கார்டன் (தி. 2007)
உறவினர்கள்ஷெரீன் நஞ்சியானி (உறவினர்)

2021 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு என்ற படத்தில் 'கிங்கோ' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[7]

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

நஞ்சியானி மே 2, 1978 ஆம் ஆண்டில் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில்[8] முஸ்லிம் தம்பதிகளான சபானா மற்றும் அய்ஜாஸ் நஞ்சியானி ஆகியோரின் இரு மகன்களில் முதல் மகனாக பிறந்தார்.[9] இவர் ஒரு சியா இசுலாமாக வளர்க்கப்பட்டார்,[10] பின்னர் அவர் இறைமறுப்பாளராக மாறினார்.[11] பிபிசி வானொலி தொகுப்பாளினி ஷெரீன் நஞ்சியானி இவரது உறவினர் ஆவார்.[12][13][14]

இவர் கராச்சியில் உள்ள செயின்ட் மைக்கேல் கான்வென்ட் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் தனது 18 வயதில் அமெரிக்காவிற்குச் சென்று, அயோவாவில் உள்ள கிரின்னல் கல்லூரியில் சேர்ந்தார், அங்கு அவர் 2001 இல் கணினி அறிவியல் மற்றும் தத்துவத்தில் இரட்டைப் பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள்தொகு

 1. "Celebrity birthdays for the week of May 2–8". AP NEWS (ஆங்கிலம்). 2021-04-26. 2021-10-05 அன்று பார்க்கப்பட்டது.
 2. Winfrey, Graham (January 22, 2017). "Amazon Wins 'The Big Sick' Bidding War $12 Million Buy Sundance 2017". IndieWire. April 11, 2017 அன்று பார்க்கப்பட்டது.
 3. Marie, Jane (May 20, 2014). "The Secret Life of Marrieds: Why We Kept Our Marriage Secret for Years". Cosmopolitan. May 5, 2017 அன்று பார்க்கப்பட்டது.
 4. "AFI Awards 2017". AFI. December 8, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. December 8, 2017 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Oscars: 'Shape of Water' Leads With 13 Noms". The Hollywood Reporter. January 23, 2018. January 23, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 6. "The 100 Most Influential People in the World". Time (ஆங்கிலம்). 2019-01-18 அன்று பார்க்கப்பட்டது.
 7. Kit, Borys (April 5, 2019). "Kumail Nanjiani in Talks to Join Angelina Jolie in Marvel's 'The Eternals' (Exclusive)". The Hollywood Reporter. April 6, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 8. Marie, Jane (May 20, 2014). "The Secret Life of Marrieds: Why We Kept Our Marriage Secret for Years". Cosmopolitan. 2020-02-23 அன்று பார்க்கப்பட்டது.
 9. Marantz, Andrew (May 1, 2017). "Kumail Nanjiani's Culture-Clash Comedy" – www.newyorker.com வழியாக.
 10. Nanjiani, Kumail. "For Comedian Kumail Nanjiani, Getting Personal Is Complicated". NPR.
 11. Wolinsky, David (August 23, 2007). "Kumail Nanjiani". The A.V. Club.
 12. Nanjiani, Shereen (September 1, 2012). "Extended Interview with Kumail Nanjiani". Shereen. BBC Radio Scotland. February 13, 2013 அன்று பார்க்கப்பட்டது.
 13. Allison, Kevin (February 11, 2013). "Live From San Francisco!". Risk!. February 13, 2013 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Interview: Kumail Nanjiani Explains Pakistani Culture (Full Interview)". Jun 28, 2017.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமைல்_நஞ்சியானி&oldid=3304098" இருந்து மீள்விக்கப்பட்டது