குரோமியம்(III) ஐதராக்சைடு

குரோமியம்(III) ஐதராக்சைடு (Chromium(III) hydroxide) என்பது Cr(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டு ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . இச்சேர்மம் நிறப்பூச்சாக, சாயமூன்றியாக மற்றும் வினையூக்கியாகக் கரிம வேதியியல் வினைகளில் பயன்படுத்தப்படுகிறது.[1]

குரோமியம்(III) ஐதராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(3+) ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
1308-14-1
InChI
  • InChI=1S/Cr.3H2O/h;3*1H2
    Key: LXMQZGGLHVSEBA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14787
வே.ந.வி.ப எண் GB2670000
  • [OH-].[OH-].[OH-].[Cr+++]
பண்புகள்
Cr(OH)3
வாய்ப்பாட்டு எடை 103.02 கி/மோல்
தோற்றம் பச்சை, ஊன்பசை வீழ்படிவு
அடர்த்தி 3.11 கி/செ.மீ3
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குரோமியம்(III) ஐதராக்சைடு வரையறுக்கப்படாத கட்டமைப்பும் குறைந்த கரைதிறனும் கொண்ட பலபடியாகும். ஈரியல்பு கரைப்பானிலும் வலுவான காரங்கள் மற்றும் வலுவான அமிலங்கள் இரண்டிலும் கரைகிறது.[2]

காரத்தில்:
அமிலத்தில்:

குரோமியம் உப்புக் கரைசலுடன் அமோனியம் ஐதராக்சைடு கரைசலைச் சேர்ப்பதன் மூலம் குரோமியம்(III) ஐதராக்சைடு பெருமளவில் தயாரிக்கப்படுகிறது.

தூய Cr(OH)3 2020 ஆம் ஆண்டு வரை கனிம இனங்களில் இருப்பதாக அறியப்படவில்லை. இருப்பினும், ஆக்சி ஐதராக்சைடின் மூன்று இயற்கையான பலலுருவங்கள் அறியப்படுகின்றன: பிரேசுவெல்லைட், கிரிமால்டைட்டு மற்றும் கயனைட்டு என்பன இவ்வுருவங்களாகும். [3][4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. Holleman, Arnold F.; Wiberg, Egon; Wiberg, Nils (1985). "Chromium". Lehrbuch der Anorganischen Chemie (in German) (91–100 ed.). Walter de Gruyter. pp. 1081–1095. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-007511-3.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Rai, Dhanpat; Sass, Bruce M.; Moore, Dean A. "Chromium(III) hydrolysis constants and solubility of chromium(III) hydroxide" Inorganic Chemistry 1987, volume 26, pp. 345-9. எஆசு:10.1021/ic00250a002
  3. "Bracewellite".
  4. "Grimaldiite".
  5. "Guyanaite".
  6. "List of Minerals". 21 March 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமியம்(III)_ஐதராக்சைடு&oldid=3992732" இலிருந்து மீள்விக்கப்பட்டது