குர்சித் கவுர்
குர்சித் கவுர் (Gurjit Kaur)(பிறப்பு 25 அக்டோபர் 1995) என்பவர் இந்தியப் பெண் வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார்.[1][2][3] இவர் பாதுகாவலரின் நிலையில் தடுப்பாட்ட நிலையினை வகிக்கிறார். இவர் இந்திய அணியின் இழுவை ஃப்ளிக்கர் ஆவார் . இவர் இந்தியாவைப் பன்னாட்டு அளவில் பிரதிநிதித்துவப்படுத்தினார், சமீபத்தில் வளைதடிப் பந்தாட்ட உலகக் கோப்பை 2018 இல் சிறப்பாகப் பங்கேற்றவர். இந்தத் தொடரில் இலக்கினை 8 கோல்களுடன் தாக்கியதால் இத்தொடரினை இந்திய அணி மிக வெற்றிகரமான எதிர்கொண்டு கண்ட வாகையாளர்களாக வெற்றி பெற்றது. 2018 ஜூலை தரவுகளின்படி இவர் 53 பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[1][4]
தனித் தகவல் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 25 அக்டோபர் 1995 பஞ்சாப், இந்தியா | ||||||||||||||
உயரம் | 1.67 மீ | ||||||||||||||
எடை | 59 கிலோ | ||||||||||||||
விளையாடுமிடம் | பாதுகாப்பாட்டம் | ||||||||||||||
தேசிய அணி | |||||||||||||||
2014– | இந்திய மகளிர் ஆக்கி அணி | 72 | (33) | ||||||||||||
பதக்க சாதனை
|
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகுர்ஜித் கவுர் 25 அக்டோபர் 1995 அன்று பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள மியாடி காலன் கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் சட்னம் சிங் மற்றும் ஹர்ஜிந்தர் கவுர் ஆகியோர் ஆவார். இவரது குடும்பம் விவசாய குடும்பமாகும். இவருடன் பிறந்தவர் மூத்த சகோதரி, பிரதீப் கவுர். இவர்களுக்குத் தரமான கல்வியினை வழங்கும் பொருட்டு 13 கி.மீ. தொலைவில் அஜ்னாவில் உள்ள அஜ்னாலாவில் உள்ள தனியார்ப் பள்ளிக்கு தங்கள் மகள்களை அனுப்பினர். குர்ஜித்தின் தந்தை சத்னம் சிங் தனது மகள்களைத் தனது மிதிவண்டியில் பள்ளிக்கு இருவரையும் அழைத்துச் சென்று பள்ளி பள்ளி முடியும் வரை நாள் முழுவதும் காத்திருந்து அழைத்து வருவார்.[5]
இது ஒரு நடைமுறைத் தீர்வு அல்ல என்பதால், 70 கி.மீ. தொலைவில் உள்ள உறைவிடப் பள்ளிக்கு தங்கள் இரண்டு மகள்களை அனுப்ப முடிவு செய்தனர். இப்பள்ளி பஞ்சாபின் டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ள கைரோனில் உள்ளது.[6] கைரோன் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான மகளிர் வளைதடிப் பந்தாட்ட பயிற்சி பள்ளியாக இருந்தது. இங்குதான் இரண்டு சகோதரிகளும் விளையாட்டில் தங்கள் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டனர். வளைதடிப் பந்தாட்ட இவர்கள் சிறந்து விளங்கியதால், இவர்களுக்குப் பள்ளியின் அரசுப் பிரிவில் இடம் கிடைத்தது. இவர்களுக்கு இலவசக் கல்வி மற்றும் உணவு வழங்கப்பட்டது. இதனால் வறுமையில் உள்ள இவரது பெற்றோருக்குச் சிறிது நிவாரணமாக இருந்தன.[5]
குர்சித் கவுர் 2011வரை கெய்ரோனில் தனது கல்வியைத் தொடர்ந்தார். அதன் பிறகு தனது கல்வி மற்றும் பயிற்சியைத் தொடர ஜலந்தரின் லியல்பூர் கல்சா மகளிர் கல்லூரியில் சேர்ந்தார். நன்கு பயிற்சிபெற்ற இவர் இந்திய இரயில்வேயில் அலகாபாத்தில் இளநிலை எழுத்தராக நியமிக்கப்பட்டார்.[7]
பணி
தொகுகுர்சித் கவுர் 2014ஆம் ஆண்டில் மூத்த தேசிய முகாமிற்கு அழைக்கப்பட்டபோது நாட்டிற்காக விளையாடும் முதல் வாய்ப்பினைப் பெற்றார். இருப்பினும், இவரால் அணியில் இடம் பெற முடியவில்லை.[5] 2017ல் தான் இவர் இந்தியப் பெண்கள் வளைதடிப் பந்தாட்ட அணியில் நிரந்தர உறுப்பினரானார். குர்ஜித் கவுர் மார்ச் 2017இல் கனடாவில் நடந்த சோதனைத் தொடரிலும், ஏப்ரல் 2017இல் வளைதடிப் பந்தாட்ட உலக லீக் சுற்று 2 மற்றும் ஜூலை 2017 இல் வளைதடிப் பந்தாட்ட உலக லீக் அரையிறுதிப் போட்டிகளிலும் விளையாடினார்.
இந்தியாவின் இடச்சு தலைமை பயிற்சியாளர், ஸ்ஜார்ட் மரிஜ்னே, டிராக் ஃப்ளிக்கிங்கில் சிறந்தவராக இருக்க இவரது மட்டையினை மாற்ற ஊக்குவித்தார். இது இவரது விளையாட்டை மேம்படுத்தியது. "நான் முன்பு பயன்படுத்திய மடை லேசானதாக உணர்ந்தேன், எனக்கு போதுமான சக்தி கிடைக்கவில்லை. எனவே, நாங்கள் ஹாலந்துக்குச் சென்றபோது, மரிஜ்னே என்னை வேறு மட்டையினால் இழுக்க முயற்சி செய்யச் சொன்னார். இது மிகவும் நன்றாக இருந்தது மற்றும் நான் மிகவும் சக்திவாய்ந்ததாக உணர்ந்தேன். இந்த மாற்றம் எனக்கு உதவியது " குர்சித் தி ட்ரிப்யூனுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.[5] மரிஜ்னே இடச்சு பயிற்சியாளர் டூன் சீப்மேனுடன் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்தார். இவர் இழுக்கும் செயல்பாட்டின் போது இவரது தோரணை மற்றும் கால் அசைவு போன்ற அடிப்படை விசயங்களில் கவனம் செலுத்த உதவினார்.
2017ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் விளையாடிய குர்சித் கவுர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதில் இந்திய அணி ஆசியக் கண்ட வெற்றியாளராக உருவெடுத்தது. இதன் விளைவாக 2018இல் லண்டனில் நடந்த வளைதடிப் பந்தாட்ட உலகக் கோப்பையில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. குர்சித் கவுர் எட்டு கோல்கள் அடித்ததன் மூலம் இந்த போட்டிகளில் அதிக கோல் அடித்தவர்களில் மூன்றாவது இடத்தினைப் பிடித்தார். மேலும் இந்திய அணியின் அதிகபட்ச கோல் அடித்தவராகவும் இருந்தார். இவர் காலிறுதியில் கசக்கஸ்தானுக்கு எதிரான ஏழு பெனால்டி கார்னர்களை மாற்றினார். அரையிறுதியில் நடப்பு வெற்றியாளராக ஜப்பானுக்கு எதிராக இரண்டு முறை கோல் அடித்தார்.[8][9]
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2018 பொதுந்லவாய விளையாட்டுப் போட்டியில் குர்ஜித் கவுர் அற்புதமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இந்தியா கோப்பையினை பெறும் நிலையில் வரவில்லை என்றாலும், நான்காவது இடத்திற்கு வந்தது. குர்ஜித் கவுர் மலேசியாவுக்கு எதிரான இரண்டாவது குழு ஏ போட்டியில் இரண்டு பெனால்டி கார்னர் மாற்றக் கோல்களால் கவனத்தை ஈர்த்தார். இந்தப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.[10]
வளைதடிப் பந்தாட்ட உலகக் கோப்பை 2018க்கு முன்னதாக, ஸ்பெயின் தேசிய அணிக்கு எதிராக ஸ்பெயின் தேசிய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது. இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில், குர்ஜித் கவுர் அணித்தலைவர் இராணி இராம்பாலுடன் இரண்டு கோல்களை அடித்தார். இவர் இரண்டு கோல்களை அடித்தார், இதனால் இறுதி புள்ளிகளாக 4-1 என்று ஆட்டத்தினை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
குர்ஜித் கவுர் வளைதடிப் பந்தாட்ட உலகக் கோப்பை அணியில் இந்தியாவின் பாதுகாவலர் மற்றும் இழுவை ஃப்ளிகராகவும் உள்ளார்.[11]
ஒலிம்பிக்கில்
தொகு2020 கோடைக்கால ஒலிம்பிக்கில் ஆத்திரேலியாவுக்கு எதிராக ஒரே கோலை அடித்து குர்ஜித் கவுர் மற்றொரு அற்புதமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இந்தியா முதன்முறையாக ஒலிம்பிக் பெண்கள் வளைதடிப் பந்தாட்ட அரையிறுதிக்கு முன்னேறியது.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Gurjit Kaur". Hockey India. Archived from the original on 26 January 2018. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.
- ↑ "India at CWG 2018: Gurjit Kaur scores twice as India defeat Malaysia 4–1 in women's hockey". Daily News & Analysis. 6 April 2018. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.
- ↑ "Gurjit Kaur". Gold Coast 2018. Archived from the original on 7 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Hockey India | Spain Tour (Women)". hockeyindia.org (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 19 July 2018. பார்க்கப்பட்ட நாள் 28 July 2018.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Grewal, Inderjit (12 November 2017). "Trust the stick she carries". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 28 July 2018.
- ↑ "'Hard work will pay off in the World Cup,' says star drag-flicker Gurjit Kaur". 15 June 2018. https://www.sportskeeda.com/hockey/hard-work-will-pay-off-in-the-world-cup-says-star-drag-flicker-gurjit-kaur.
- ↑ "City's 'Chak De' girls aim for Olympics gold". The Tribune. 6 June 2017. பார்க்கப்பட்ட நாள் 28 July 2018.
- ↑ "From Gurjit Kaur to Savita Punia: Four players who impressed during India's Asia Cup triumph". https://scroll.in/field/856904/from-gurjit-kaur-to-savita-punia-four-players-who-impressed-during-indias-asia-cup-triumph.
- ↑ .
- ↑ "Commonwealth Games 2018: Gurjit Kaur strikes twice as India women's team thrash Malaysia – Laureus World Sports Awards 2017". https://www.firstpost.com/laureus/article/commonwealth-games-2018-gurjit-kaur-strikes-twice-as-india-womens-team-thrash-malaysia-4420667.html.
- ↑ Scroll Staff. "Rani Rampal to lead Indian team in women's hockey World Cup". https://scroll.in/field/884609/rani-rampal-to-lead-indian-team-in-womens-hockey-world-cup.
- ↑ "Brave Indian women create history, enter Olympic hockey semifinals for first time". https://www.thehindu.com/sport/hockey/brave-indian-women-create-history-enter-olympic-hockey-semifinals-for-first-time/article35674584.ece.