குர்ரம் யாதகிரி ரெட்டி
குர்ரம் யாதகிரி ரெட்டி (Gurram Yadagiri Reddy) (5 பிப்ரவரி 1931 - 22 நவம்பர் 2019) தெலுங்கானா கிளர்ச்சியின் சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த அரசியல்வாதியும் ஆவார். ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இராமண்ணாபேட்டை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஐதராபாத் நிசாமின் ஆட்சியின் போது தெலங்காணா விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்தின் போது புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தார். யாதகிரி ரெட்டி 22 நவம்பர் 2019 அன்று தனது 88வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
குர்ரம் யாதகிரி ரெட்டி | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர் மற்றும் விடுதலை இயக்க வீரர் | |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 1985–1999 | |
முன்னையவர் | உப்புனுத்துலா புருசோத்தம் ரெட்டி |
பின்னவர் | பாப்பையா கொம்மு |
தொகுதி | இராண்ணாபேட்டை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 பிப்ரவரி 1931 |
இறப்பு | 22 நவம்பர் 2019 (வயது 88) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
துணைவர் | யாதம்மாள்a |
பிள்ளைகள் | 4 |
பெற்றோர் | நரசம்மாள், இராம் ரெட்டி |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகுர்ரம் யாதகிரி ரெட்டி, 1931 பிப்ரவரி 15 அன்று தெலங்காணா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தின் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் குண்டலா மண்டலத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் நரசம்மா மற்றும் குர்ரம் ராம் ரெட்டி ஆகியோருக்கு நான்காவது மகனாக பொவுடைமை இயக்கங்களுக்குப் பெயர் பெற்ற சுத்தலா என்ற கிராமத்தில் வளர்ந்தவர்.
ரெட்டி, யாதம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ராஜசேகர் ரெட்டி என்ற வழக்கறிஞர் மற்றும் ராம்மோகன் ரெட்டி என்ற பத்திரிகையாளர் மற்றும் பாரதிம்மா, ராஜாமணி என்ற இரு மகள்கள் உள்ளனர்.
பதினைந்தாவது வயதில், இவர் பொதுவுடைமை சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டார். மேலும், ஐதராபாத் நிசாமின் தேஷ்முக்குகள், இரசாக்கர்களுக்கு எதிராக போராடினார். இவர் தனது இளமை பருவத்தில் கொரில்லா இயக்கங்களில் பங்கேற்றார். இவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விவசாய இயக்கங்களுக்காக நன்கு அறியப்பட்டவர்.
அரசியல் வாழ்க்கை
தொகுயாதகிரி ரெட்டி, தனது பள்ளிப் பருவத்திலேயே பொதுவுடைமை சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தெலங்காணா, திரிபுரா மற்றும் கேரளாவில் தங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்கத் தயங்கிய உள்ளூர் மன்னர்களுக்கு எதிராக இந்திய பொதுவுடமைக் கட்சி ஆயுதப் போராட்டங்களை நடத்தியது. ஐதராபாத் நிசாமுக்கு எதிராக தெலங்காணாவில் நடந்த கிளர்ச்சியில் தீவிர உறுப்பினராக இவர் இருந்தார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தீவிர உறுப்பினராக, நல்கொண்டா மாவட்டத்தில் இருந்து விவசாயிகள் சார்பில் பல ஊர்வலங்களை பாதயாத்திரையாக வழிநடத்தினார்.
தெலங்காணா ஆயுதக் கிளர்ச்சியில், இவர் சுத்தலா அனுமந்து, தர்ம பிக்சம், மல்லு சுயராச்சியம் மற்றும் பீம்ரெட்டி நரசிம்ம ரெட்டி மற்றும் அந்தக் காலத்தின் பிற வலுவான பொதுவுடைமை முன்னோடிகளுடன் பணியாற்றினார்.
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பதவிகளை வகித்தார். கட்சியின் ராமண்ணாபேட்டை வட்டச் செயலாளராகவும், விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவராகவும், ஆந்திர பிரதேச மாநில அகில பாரத விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார்.
யாதகிரி ரெட்டி இராமண்ணாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றார், 1985, 1989 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில், இரண்டு முறை அன்றைய வலுவான போட்டியாளரான வுப்புனுதலா புருஷோத்தம் ரெட்டியை எதிர்த்து, முன்னாள் அமைச்சரும், ஒரு முறை இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் அமைச்சருமான கொம்மு பாப்பையாவுக்கு எதிராகவும் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ^ "సీపీఐ సీనియర్ నేత యాదగిరిరెడ్డి కన్నుమూత". Eenadu (in Telugu). 22 November 2019. Retrieved 22 November 2019.
- Andhra Pradesh Assembly Election Results in 1994