குலக்குறிச் சின்னம்
குலக்குறிச் சின்னம் (totem) என்பது பழங்குடி மக்களின் குடும்பம், கோத்திரம், குலம் மற்றும் பரம்பரைக் குழுவினர் சமய வழிபாட்டில் தெய்வீகமாகக் கருதப்படும் ஒரு ஆவி, புனிதமான பொருள் அல்லது ஒரு சின்னம் ஆகும்.[1][2] அமெரிக்கா கண்டம், ஆப்பிரிக்கா கண்டம் மற்றும் ஆஸ்திரேலிய தொல்குடி மக்கள் ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கென தனித்தனி குலக்குறிச் சின்னங்கள் கொண்டுள்ளனர். சிம்பாப்வே நாட்டில் ஒரே குலக்குறிச் சின்னத்தை வழிபடுபவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்வதில்லை. ஆபிரகாமிய சமய மக்கள் அரேபியாவின் காபாவில் உள்ள தெய்வீக கறுப்புக் கல்லை குலக்குறிச் சின்னமாக தொன்று தொட்டு வழிபட்டனர்.