குலுக்கல்லூர் தொடருந்து நிலையம்
குலுக்கல்லூர் தொடருந்து நிலையம் (Kulukkallur railway station) என்பது கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில், பட்டாம்பிக்கு அருகில் உள்ள குலுக்கல்லூர் என்ற சிற்றூரில் உள்ள ஒரு முக்கிய தொடருந்து நிலையம் ஆகும். இது தென்னக இரயில்வேயின் ஷோரனூர்-மங்களூர் பாதையில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் நிறுத்தப்படும் தொடருந்துகள் இந்த ஊரை நிலம்பூர், ஷொர்ணூர், அங்காடிபுரம் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கின்றது.[1]
குலுக்கல்லூர் | |||||
---|---|---|---|---|---|
நிலைய பெயர்ப் பலகை | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | பாலக்காடு, கேரளம் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 10°52′06″N 76°14′20″E / 10.8682°N 76.2390°E | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | நீலம்பூர்-ஷோரனூர் தொடருந்து பாதை | ||||
நடைமேடை | 1 | ||||
இருப்புப் பாதைகள் | 1 | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | பயன்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | KZC | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1921 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
ஷோரனூர்-நிலம்பூர் தொடருந்து பாதை
தொகுநீலம்பூர்-ஷோரனூர் தொடருந்து பாதை என்பது கேரளா மாநிலத்தில், தென்னக இரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட ஒரு கிளைப் பாதையாகும். மேலும் இது இந்தியாவின் அகலப் பாதைகளில் ஒன்றாகும்.[2] இது ஷோரனூர் சந்திப்பில் இருந்து (பாலக்காடு மாவட்டம்) நிலம்பூர் தொடருந்து நிலையம் வரை (மலப்புறம் மாவட்டம்) 66 கிலோமீட்டர்கள் (41 மைல்) நீளம் கொண்ட ஒற்றை வழிப் பாதையாகும்.[2] இந்த நிலையம் கோழிக்கோடு–உதகமண்டலம் நெடுஞ்சாலையில் நிலம்பூர் நகரத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.[2] இந்த வழித்தடத்தில் ஷோரனூர்–நிலம்பூர் சாலை பயணிகள் இரயில்கள் இயக்கப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kanhangad Train Connectivity" இம் மூலத்தில் இருந்து 14 February 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120214143823/http://www.mathrubhumi.com/kanhangad_train_time.html.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "The Nilambur news". Kerala Tourism. Archived from the original on 20 September 2016. பார்க்கப்பட்ட நாள் 26 April 2010.