குளோரோவளையபுரோப்பேன்

வேதிச் சேர்மம்

குளோரோவளையபுரோப்பேன் (Chlorocyclopropane) என்பது C3H5Cl. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியல் சேர்மமாகும்.[1] கரிம குளோரின் சேர்மமான இது ஆலோ ஆல்க்கேன் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகும்.[2]

குளோரோவளையபுரோப்பேன்
Chlorocyclopropane
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
குளோரோவளையபுரோப்பேன்
வேறு பெயர்கள்
வளையபுரோப்பைல் குளோரைடு, வளையபுரோப்பைல்குளோரைடு
இனங்காட்டிகள்
7393-45-5 Y
ChemSpider 73887
EC number 230-988-0
InChI
  • InChI=1S/C3H5Cl/c4-3-1-2-3/h3H,1-2H2
    Key: VEZNCHDBSQWUHQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 81879
  • C1CC1Cl
UNII 2VAN2MPF6S N
பண்புகள்
C3H5Cl
வாய்ப்பாட்டு எடை 76.52 g·mol−1
அடர்த்தி கி/செ.மீ3
உருகுநிலை −97.68 °C (−143.82 °F; 175.47 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

வளையபுரோப்பேனை ஒளி வேதியியல் குளோரினேற்ற வினைக்கு உட்படுத்தி குளோரோவளையபுரோப்பேன் தயாரிக்கப்படுகிறது. இதற்காக வளையபுரோப்பேனுடன் குளோரின் வாயுவைச் சேர்த்து வினை நிகழ்த்தப்படுகிறது. வினையில் உருவாகும் பல்குளோரினேற்ற சேர்மங்களை தனித்தனியாகப் பிரித்துக் கொள்ள இயலும்.[3]

வேதிப்பண்புகள்

தொகு

குளோரோவளையபுரோப்பேனை சூடாக்கினால் 3-குளோரோபுரோப்பேன் என்ற மாற்றியனை ஒத்த சேர்மமாக மாற்றமடைகிறது.[4] குளோரோவளையபுரோப்பேன் ஈதரில் உள்ள இலித்தியத்துடன் வினைபுரிந்து இருவளையபுரோப்பேன் எனப்படும் பைசைக்ளோபுரோப்பேனைக் கொடுக்கிறது. குளோரோவளையபுரோப்பேன் மக்னீசியத்துடனும் வினையில் ஈடுபட்டு வளையபுரோப்பைல்மக்னீசியம் குளோரைடைக் கொடுக்கிறது.[5]

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "chlorocyclopropane". NIST. பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
  2. Murin, A. N.; Murin, I. V.; Kazakov, V. P.; Sivkov, V. P. (1 May 1972). "NQR study of the nature of C-C1 bonds in chlorocyclopropanes" (in en). Journal of Structural Chemistry 13 (3): 497–500. doi:10.1007/BF00743850. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-8779. https://link.springer.com/article/10.1007/BF00743850. பார்த்த நாள்: 31 May 2023. 
  3. Slabey, Vernon A. (October 1952). "Reaction of Cyclopropyl Chloride with Lithium. Isolation of Dicyclopropyl" (in en). Journal of the American Chemical Society 74 (19): 4928–4930. doi:10.1021/ja01139a056. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01139a056. பார்த்த நாள்: 31 May 2023. 
  4. Grant, R. C. S.; Swinbourne, E. S. (1 January 1966). "The thermal isomerization of chlorocyclopropane and of bromocyclopropane" (in en). Chemical Communications (17): 620b–621. doi:10.1039/C1966000620B. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-241X. https://pubs.rsc.org/en/content/articlelanding/1966/C1/c1966000620b. பார்த்த நாள்: 31 May 2023. 
  5. Roberts, John D.; Chambers, Vaughan C. (July 1951). "Small-Ring Compounds. VI. Cyclopropanol, Cyclopropyl Bromide and Cyclopropylamine" (in en). Journal of the American Chemical Society 73 (7): 3176–3179. doi:10.1021/ja01151a053. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01151a053. பார்த்த நாள்: 31 May 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோவளையபுரோப்பேன்&oldid=3788084" இலிருந்து மீள்விக்கப்பட்டது