நண்பர்களின் சமய சமூகம்

(குவாக்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நண்பர்களின் சமயக் குழு (Religious Society of Friends) அல்லது நண்பர்களின் திருச்சபை (Friends Church) எனப்படுவது ஒரு கிறித்தவ இயக்கம். மதத்தில் நம்பிக்கை உடைய எல்லாருக்கும் சமயகுருமார் ஆகும் தகுதி உண்டு என்னும் கொள்கையைக் கொண்ட ஓர் இயக்கம் இது. இச்சம்ய இயக்கத்தின் உறுப்பினர்கள் "நண்பர்கள்" (Friends) அல்லது "குவேக்கர்கள்" (Quakers) என்று அழைக்கப்படுகின்றனர். இம்மதம் தனித்தனி நிறுவனங்களின் கூட்டாகவே இயங்குகின்றது. ஒவ்வொன்றும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிந்த நிறுவனமாக உள்ளது.

நண்பர்களின் சமயக் குழு
Quaker Star
"நண்பர்கள்" சேவை நிறுவனங்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து பயன்படுத்தும் சின்னம்
இறையியல் எவாஞ்சலிக்கம், தாராண்மிய கிறித்தவம், மரபுவழி
ஆட்சிமுறை பலவகை
Distinct fellowships Friends World Committee for Consultation
சங்கங்கள் Evangelical Friends International, Friends General Conference, Friends United Meeting
புவியியல் பிரதேசம் கென்யா, வட அமெரிக்கா, பொலிவியா, ஐக்கிய இராச்சியம், இந்தியா, உருவாண்டா, தான்சானியா
நிறுவனர் சியார்ச் ஃவாக்சு
ஆரம்பம் 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி
இங்கிலாந்து
பிரிந்தது இங்கிலாந்து திருச்சபை
உறுப்பினர்கள் 340,558 (2007 இல்)[1]
உதவி நிறுவனங்கள் American Friends Service Committee, Canadian Friends Service Committee, Quaker Peace and Social Witness (UK)
வேறு பெயர்(கள்) நண்பர்களின் திருச்சபை

இந்த இயக்கம் 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்தில் தொடக்கம் பெற்றது. "பயணம் செய்யும் குருமார்களாக" இருந்தவர்களில், குறிப்பாக சியார்ச் ஃவாக்சு, சேம்சு நெய்லர், மார்கரெட் ஃவெல், பிரான்சிசு ஃகவுகில் ஆகியோர், இங்கிலாந்தில் செல்வாக்குடன் இருந்த, இங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பில் இருந்து பிரிந்து வந்தனர். இவர்கள் விவிலியத்தில் சொல்லியவாறு நேரடியாகத் தன்னுள்ளே இயேசுநாதரை உணரலாம் என்று கருதினர்.[2]

குவேக்கர் கொள்கையைப் பின்பற்றுவோர், ஆடம்பரம் இல்லா, எளிய உடை அணிவதும், கள்ளுண்ணாமையையும், போர்களில் பங்கு கொள்ளாமையையும் வழக்கமாக கொண்டிருந்தனர். பல குவேக்கர்கள் வங்கிகளையும் மற்ற நிதி சார்ந்த நிறுவனங்களையும் நிறுவுவதில் புகழ்பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் நிறுவிய நிதி நிறுவனங்களுள் பார்க்கிளேய்சு (Barclays), இலாய்ட்சு (Lloyds) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவர்கள் ஈட்டிய பணத்தில் இருந்து பல கொடையளிப்புகள் செய்துள்ளனர். அடிமை முறைக்கு எதிராகவும், சிறை அமைப்புகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும், பற்பல குமுக நீதி அறமுறைகளுக்காகவும் பாடுபட்டனர். வாக்கர்கள் துவக்கத்தில் கிறித்தவர்களாக இருந்தபோதிலும் இன்றைய காலத்தில் கிறித்தவர்கள் அல்லாதவரும் இக்குழுவில் உள்ளனர். உலகெங்கும் படர்ந்திருந்தாலும் பெரும்பாலான குவாக்கர்கள் பொலிவியா, குவாத்தமாலா, இந்தியா,கென்யா, தான்சானியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ளனர்.

வரலாறு

தொகு
 
ஆங்கிலசீர்திருத்தவாதி சியார்ச் ஃபாக்சு (George Fox) 17ஆம் நூற்றாண்டின் முக்கிய குவேக்கர் ஆவார்

1600ஆம் ஆண்டு நண்பர்களின் சமய சமூகத்தை சியார்ச் ஃபாக்சு என்பவர் மூலம் தொடங்கியது. அவர் அனைத்து மனிதரும் கடவுளுடன் பேசலாம், அண்மித்து இருக்கலாம் என்று பென்டில் மலையில் நிகழ்த்திய உரையில் தெரிவித்தார். கடவுளை அணுக இடைப்பட்ட பாதிரிகள் வேண்டியதில்லை என்று வலியுறுத்தினார். இவரது கூற்றுக்களை விரும்பியவர்கள் இக்குழுவை அமைத்தனர். இப்புதிய "சமயத்தை" இங்கிலாந்து அரசு விரும்பவில்லை. குவேக்கர்களுக்கு எதிராக இங்கிலாந்து அரசு குவேக்கர் சட்டம் (1662), கான்வெண்டிக்கிள் சட்டம் (1664) (Conventicle Act 1664) என்பனவற்றை உருவாக்கி அவர்கள் ந்அம்பிக்கையை அழிக்கவோ, மாற்றவே முற்பட்டது. அந்தக் காலத்தில் இங்கிலாந்து திருச்சபையில் இணையாதிருப்பது சட்டத்திற்கு புறம்பானது. பலரை சிறையில் அடைத்தும் கட்டணங்கள் வசூலித்தும் மாற்ற முயன்றது. துவக்கத்தில் குவேக்கர் என்ற சொல் இக்குழு உறுப்பினர்களை கிண்டல் செய்யவே பயன்படுத்தப்பட்டது. ஆயினும் இந்தச் சொல்லை விரும்பத்தொடங்கிய "நண்பர்கள்" தாங்களும் அவ்வாறே அழைத்துக்கொள்ளத் தொடங்கினர்.

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக இருந்தமையால் சில குவேக்கர்கள் அமெரிக்கா இடம் பெயர்ந்தனர். இவ்வாறு அமெரிக்கா சென்ற வில்லியம் பென் என்ற இளம் குவேக்கர், அரசர் சார்லசு-2 தமது தந்தைக்கு கடன்பட்டிருந்த பணத்திற்கு ஈடாக கொடுத்த நிலத்தில், புதிய குடியிருப்பொன்றை உருவாக்கினார். இக்காலனியே பென்சில்வேனியா என்று அழைக்கபடலாயிற்று. இங்கு யாவரும் அவரவருக்கு பிடித்தமான சமயத்தை கடைபிடிக்க தடையேதும் இல்லாதிருந்தது. தனது புதிய காலனியின் மிகப்பெரிய நகரைப் பென் "பிலடெல்பியா" - சகோதர அன்புடை நகரம்" என்று அழைத்தார். விரைவிலேயே அமெரிக்காவில் பல குவேகர்கள் குடியேறத் தொடங்கினர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் குவேகர்கள் அமெரிக்காவில் மிகவும் துடிப்பாக இருந்தனர். அடிமைத்தன ஒழிப்பு, பெண்கள் விடுதலை போன்ற இயக்கங்களில் ஈடுபட்ட புகழாளிகள் குவேக்கர்களாக இருந்தனர்.

இன்று ஏறத்தாழ 350,000[3] குவேக்கர்கள் உலகெங்கும் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. பிற சமயத்தினருடன் எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையினராக இருந்தபோதிலும் பலரும் இவர்களைப் பற்றி அறிந்துள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Friends World Committee for Consultation (2007) 'Finding Quakers around the World http://www.fwccamericas.org/publications/images/fwcc_map_2007_sm.gif பரணிடப்பட்டது 2010-12-15 at the வந்தவழி இயந்திரம்
  2. World Council of Churches. "Friends (Quakers)". Church Families. Archived from the original on 2011-11-04. பார்க்கப்பட்ட நாள் 2012-01-19.
  3. http://www.quakerinfo.org/resources/worldstats.html

வெளியிணைப்புகள்

தொகு

விபரம்

தொகு

ஆவணப் படங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நண்பர்களின்_சமய_சமூகம்&oldid=3725971" இலிருந்து மீள்விக்கப்பட்டது