குவால்தாம்
குவால்தாம் (Gwaldam) என்பது இந்தியாவில் உள்ள ஒரு மலை வாழிடம் ஆகும். இது உத்தராகண்டம் மாநிலத்தில் கார்வாலுக்கும் குமாவுனுக்கும் இடையில் அமைந்துள்ளது. கௌசானியிலிருந்து 39 கி.மீ. தொலைவிலுள்ளது.
குவால்தாம் | |
---|---|
அடைபெயர்(கள்): நகரம் | |
ஆள்கூறுகள்: 30°01′N 79°34′E / 30.02°N 79.57°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
மாவட்டம் | சமோலி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1.2526 km2 (0.4836 sq mi) |
ஏற்றம் | 1,940 m (6,360 ft) |
மக்கள்தொகை 1557 ஆண்களும் 1363 பெண்களும் 690 குடியிருப்புகளில் வசிக்கின்றனர். கல்வியறிவு விகிதம் 78% (2011 மக்களதொகைக் கணக்கெடுப்புப்படி) | |
• மொத்தம் | 2,920 |
• அடர்த்தி | 2,300/km2 (6,000/sq mi) |
இந்தி, கார்வாலி, குமாவுனி, திபெத்தன், ஆங்கிலம் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
246441 | 246441 |
வாகனப் பதிவு | உகே 11 |
இணையதளம் | uk |
நிலவியல்
தொகுகுவால்தாம் 30.02 ° வடக்கிலும் 79.57 ° கிழக்கிலும் அமைந்துள்ளது . [1] இது சராசரியாக 1,940 மீட்டர் (6,364 அடி) உயரத்தில் உள்ளது. இது இடைக்கால கத்யூரி மன்னர்களின் தலைநகரான பைஜ்நாத்திலிருந்து 20 கி.மீ தூரத்திலும், நந்தா தேவி ராஜ் ஜாட்டின் புகழ்பெற்ற திருவிழா நடக்குமிடமான குல்சாரியிலிருந்து 25 கி.மீ தூரத்திலும் உள்ளது.
ஒரு சிறிய நகரம் குவால்தாமின் செழிப்புக்கு முக்கிய காரணம் அது குமாவுன் மற்றும் கார்வால் சந்திப்பில் அமைந்திருப்பதேயாகும். மேலும் இங்கிருந்து பல பாதைகள் வெவ்வேறு பகுதிகளுக்கும் கிராமங்களுக்கும் இட்டுச் செல்கின்றன. இது கத்கோடம் (நைனித்தால்) தொடர் வண்டிப் பாதையிலிருந்து மலையேற்ற பாதையில் லார்ட் கர்சன் டிரெயில் (குவாரி கணவாய்), நந்தா தேவி ராஜ் ஜாட் மற்றும் ரூப்குண்ட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் மலையேறுபவர்களுக்கான அடிப்படை முகாமாகும். ஒரு காலத்தில் உருளைக் கிழங்கு, ஆப்பிள் வர்த்தகத்திற்கு இது ஒரு மண்டியாக இருந்துள்ளது.
குறிப்புகள்
தொகு- The Himalayan Gazetteer by E.T. Atkinson (Author)
- http://chamoli.nic.in/pages/display/79-gwaldam
- www.censusindia.gov.in (Category : statistics of chamoli district) District Census Hand Book Chamoli, Census of India 2011, Uttarakhand : Series 06 - Part XII-B