கு. காமாட்சி

கு. காமாட்சி (K. Kamatchi)(பிறப்பு செப்டம்பர் 14, 1929) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியினைச் சார்ந்தவர். இவர் லால்குடி மற்றும் திருச்சிராப்பள்ளியில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளிக் கல்வியினைப் பயின்றார். காமாட்சி, திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 திருவெறும்பூர் திமுக 43,233 51.31

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 135. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._காமாட்சி&oldid=3452612" இலிருந்து மீள்விக்கப்பட்டது