கூகுள் நலம்

(கூகிள் நலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கூகிள் நலம் (Google Health) என்பது 2008 ஆம் ஆன்டில் கூகுள் நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட தனிநபர் சுகாதார சேவை தகவல் மையம் ஆகும். இந்தச் சேவையானது 2011 ஆம் ஆண்டில் கூகிள் நிறுவனத்தால் நிறுத்தப்பட்டது.[1] இந்த சேவையினை கூகிள் பயனர்கள் தன்னார்வத்தின் அடிப்படையில் கைமுறையாகவோ அல்லது சேவை பங்குதாரர்களின் சேவையாளர் கணக்கில் புகுபதிகை செய்வதன் மூலமோ தங்களது உடல்நலன் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் ஒழுங்கமைத்துப் பகிர கூகிள் நலம் வழிவகை செய்கிறது.

கூகிள் நலம்
வலைத்தள வகைதனிப்பட்ட சுகாதார பதிவு சேவை
உரிமையாளர்கூகுள்
வணிக நோக்கம்ஆம்
பதிவு செய்தல்Required
வெளியீடுமே 20, 2008 (2008-05-20)
தற்போதைய நிலைமுதல் இடை நிறுத்தம் செய்யப்பட்டது சனவரி 1, 2012 (2012-01-01)
உரலிwww.google.com/health[தொடர்பிழந்த இணைப்பு]

இந்த தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும் தகவல்களில் அவர்களின் உடல்நிலை, அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விவரம், ஒவ்வாமைகள் மற்றும் ஆய்வு முடிவுகள் ஆகியவை அடங்கும்.[2]

வரலாறு

தொகு

கூகிள் நலம் 2006 ஆம் ஆண்டின் மத்தியில் குறைவளர்ச்சி நிலையிலிருந்தது. பின் 2008 இல் இரண்டுமாத சோதனைத்திட்ட அடிப்படையில் 1600 நோயாளிகளுக்கு இந்தச் சேவையானது தெ கிலேவ்லேண்ட் மருந்தகத்தில் நடைபெற்றது. மே 20, 2008 இல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இரண்டாம்நிலைச் சோதனையாக கூகிள் நிறுவனம் வழங்கியது.

செப்டம்பர் 15, 2010 இல் கூகிள் நிறுவனம், கூகிள் நலத்திற்கான இற்றையாக்கத்தை (அப்டேட்) அளித்தது. இந்த இற்றையாக்கம் தோற்றம் மற்றும் உணர்தலில் மாற்றத்தைக் கொண்டிருந்தது.[3]

சூன் 24, 2011 இல் கூகுள் நிறுவனம் தங்களின் கூகிள் நல சேவையினை சனவரி 1, 2012 அன்று முதல் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. சனவரி 1, 2013 முதல் கணினிக் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவித்தது. போதிய வரவேற்பு இல்லாததால் இந்தத் திட்டத்தை கைவிடுவதாக கூகுள் அறிவித்தது. [4]

பங்குதாரர்கள்

தொகு

கூகிள் நலமும் மற்ற கூகிளின் சேவைகளைப் போலவே வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் கூகிள் நலத்தில் எந்தவிதமான விளமபரங்களும் இடம்பெறவில்லை. [5] இந்தச் சேவையின் மூலம் எவ்வாறு பணம் ஈட்டத் திட்டமிட்டுள்ளது என்பதனை கூகுள் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால் வால்ஸ்ட்ரீட் இதழின் கட்டுரையில் கூகுள் எதிர்காலத்திலும் விளமபரங்களில் ஈடுபடாது எனத் தெரிவித்தது.[6]

கூகிள் நலம், பின்வரும் பங்குதாரர் நிறுவனங்களிடமிருந்து நோயாளிகளின் மருந்துக் குறிப்பு முதலிய தகவல்களை தரவு இறக்குமதி செய்கிறது. ஆல்ஸ்கிரிப்ட்சு, அன்விதாஹெல்த், தெ கிலெவ்லண்ட், சி வி எஸ் கேர்மார்க், மருந்து.காம்.

போட்டியாளர்கள்

தொகு

கூகிள் நலம் என்பது தனிப்பட்ட சுகாதரப் பதிவுகள் சேவை ஆகும். அமெரிக்க ஐக்கிய நாட்டில் இதனுடைய முதன்மைப் போட்டியாளர்களாக மைக்ரோசாப்ட் நலக் காப்பறை (ஹெல்த் வால்ட்) மற்றும் திறவூற்று மூல நிரல் இன்டிவோ திட்டம் ஆகியவை கருதப்படுகிறது. மேலும் பல திறவூற்று மூல நிரல் திட்டங்கள் மற்ற நாடுகளிலும் இந்தச் சேவைக்குப் போட்டியாகத் திகழ்கின்றது.[7]

சூலை 18, 2011 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு கருவியை வெளியிட்டது. அந்தக் கருவியின் மூலம் கூகிள் நலத்தின் பயனாளர்கள் , தங்களுடைய தனிப்பட்ட சுகாதாரத் தகவல்களை மைக்ரோசாப்ட் நலக் காப்பறைக் கணக்கிற்கு இடமாற்றம் செய்ய உதவுகிறது[8]. டிசம்பர் 7, 2011 இல் மெடிகனெக்ட் குளோபல் நிறுவனமும் மை மெடி கனெக்ட் எனும் வலைத்தளத்தில் கூகிள் நலப் பயனர்கள் தங்களுடைய தனிப்பட்ட சுகாதாரத் தகவல்களை இடமாற்றம் செய்ய வழிவகை செய்தது.[9]

இடைநிறுத்தம்

தொகு

சூன் 24, 2011 இல் கூகிள் நிறுவனம் தனது கூகிள் நலம் திட்டத்தினை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது.[10] அந்த அறிவிப்பில் பின்வருமாறு தெரிவித்திருந்தது

மேற்கோள்கள்

தொகு
  1. "An update on Google Health and Google PowerMeter". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 21, 2016.
  2. "About Google Health". Google. பார்க்கப்பட்ட நாள் 2008-05-20.
  3. Krazit, Tom. "Google tweaks Google Health dashboards". பார்க்கப்பட்ட நாள் 15 September 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "An update on Google Health and Google PowerMeter". பார்க்கப்பட்ட நாள் 24 June 2011.
  5. "Google Health: Frequently Asked Questions". பார்க்கப்பட்ட நாள் 2008-05-20.
  6. Vascellaro, Jessica E. (2008-05-20). "Wall Street Journal: Google Helps Organize Medical Records". The Wall Street Journal. https://www.wsj.com/articles/SB121123806355705263. பார்த்த நாள்: 2008-05-20. 
  7. History of the Personally Controlled Health Record பரணிடப்பட்டது மே 21, 2016 at the வந்தவழி இயந்திரம்: "The Indivo project has its roots in the Guardian Angel project, a collaboration between Harvard and MIT ..."; the article shows a simple timeline or pedigree of the Personally Controlled Health Record.
  8. Greene, Jay (July 18, 2011). "Microsoft offers transfer tool to Google Health users". CNET. CBS Interactive. பார்க்கப்பட்ட நாள் June 7, 2017.
  9. BusinessWire. "MyMediConnect Offers Displaced Google Health Users Free, Simple Conversion Process for Transferring Personal Health Record Account பரணிடப்பட்டது மார்ச்சு 4, 2016 at the வந்தவழி இயந்திரம்." Dec 7, 2011. Retrieved May 9, 2012.
  10. Brown, Aaron (2011-06-24). "Official Blog: An update on Google Health and Google PowerMeter". Googleblog.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.

வெளியிணைப்புகள்

தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_நலம்&oldid=4172606" இலிருந்து மீள்விக்கப்பட்டது