கூச் பெகர் மக்களவைத் தொகுதி
கூச் பெகர் மக்களவைத் தொகுதி (Cooch Behar Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பெகரை மையமாகக் கொண்டுள்ளது. எண். 1 கூச் பெகர் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றப் பகுதிகளும் கூச் பெகர் மாவட்டத்தில் உள்ளன. இந்தத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கூச் பெகர் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
கூச் பெகர் மக்களவைத் தொகுதியை காட்டும் வரைபடம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
நிறுவப்பட்டது | 1957 |
மொத்த வாக்காளர்கள் | 1,814,200[1] |
ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
சட்டப் பேரவைத்தொகுதிகள்
தொகுதொகுதிச் சீரமைப்பு ஆணையத்தின் உத்தரவின்படி, மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக, நாடாளுமன்றத் தொகுதி எண். 1 கூச் பெகர், பட்டியல் சாதிகளுக்கு ஒதுக்கப்பட்டது. [2]
கூச் பெகர் மாவட்டத்தின் மாதபங்கா உட்பிரிவின் கீழ் உள்ள பகுதி, மாதபங்கா மற்றும் சிதல்குச்சி சட்டமன்றத் தொகுதிகளை உருவாக்கிறது. அதே சமயம் தின்கட்டா உட்பிரிவின் கீழ் உள்ள பகுதி தின்கட்டா மற்றும் சீதை தொகுதிகளை உருவாக்கிறது. [2] கூச் பெகார் சதார் உட்பிரிவின் கீழ் உள்ள பகுதி கூச் பெகர் வடக்கு, கூச் பெகர் தெற்கு மற்றும் நடாபரி தொகுதிகளை உருவாக்குகிறது. இருப்பினும் நடபாரி துபாங்கஞ்ச் உட்பிரிவில் இருந்தும் கிராம கிராம ஊராட்களைக் கொண்டுள்ளது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "PC Wise Voters Turn Out" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 2021-06-18. p. 26. Archived from the original on 8 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2023-12-21.
{{cite web}}
: CS1 maint: date and year (link) - ↑ 2.0 2.1 2.2 "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. Archived from the original (PDF) on 18 September 2010. பார்க்கப்பட்ட நாள் 26 May 2014.