கூடூர் சட்டமன்றத் தொகுதி

கூடூர் சட்டமன்றத் தொகுதி (Gudur Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.[1] திருப்பதி மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று.

ஒய். எசு. ஆர். காங்கிரசு கட்சியின் வரபிரசாத் ராவ் வெலகபள்ளி இந்த தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

கண்ணோட்டம் தொகு

இது நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சர்வபள்ளி, சூலூர்பேட்டை, வெங்கடகிரி மற்றும் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, சத்தியவேடு ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் திருப்பதி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

மண்டலங்கள் தொகு

மண்டல்
கூடூர்
சிலாகூர்
கோட்டா
வகாடு
சித்தாமூர்

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952 பெளட்டி கோபாலகிருஷ்ண ரெட்டி இதேகா
1955
1962
1967 வி.இராமச்சந்திர ரெட்டி சுயேச்சை
1972 சீனிவாசலு ரெட்டி நல்லபரெட்டி சுயேச்சை
1978 பத்ரா பிரகாச ராவ் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1983 ஓகி மஸ்தானையா சுயேச்சை
1985 பல்லி துர்கா பிரசாத் ராவ் தெலுங்கு தேசம்
1989 பத்ரா பிரகாச ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1994 பல்லி துர்கா பிரசாத் ராவ் தெலுங்கு தேசம்
1999
2004 பத்ரா பிரகாச ராவ் இந்திய தேசிய காங்கிரசு
2009 பல்லி துர்கா பிரசாத் ராவ் தெலுங்கு தேசம்
2014 பாசிம் சுனில் குமார் ஒய்.எசு.ஆர்.கா.
2019 வரபிரசாத் ராவ் வெலகப்பள்ளி

மேற்கோள்கள் தொகு