கெச்சியோபல்ரி ஏரி

மேற்கு சிக்கிமிலுள்ள ஒரு ஏரி

கெச்சியோபல்ரி ஏரி (Khecheopalri Lake) முதலில் கா-சோட்-பல்ரி (Kha-Chot-Palri) ( பத்மசாம்பவரின் சொர்க்கம் என்று பொருள்) என்று அழைக்கப்பட்டது. வடகிழக்கு இந்திய மாநிலமான சிக்கிமின் மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் கேங்டாக்கிற்கு மேற்கே 147 கிலோமீட்டர் (91 மைல்) தொலைவில் கெச்சியோபல்ரி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[1]

கெச்சியோபல்ரி ஏரி
Foot bridge to Khecheolpalri Lake
ஏரியை அடைய அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறு பாலம்
ஏரியின் அமைவிடம்
ஏரியின் அமைவிடம்
கெச்சியோபல்ரி ஏரி
சிக்கிமில் ஏரியின் அமைவிடம்
ஏரியின் அமைவிடம்
ஏரியின் அமைவிடம்
கெச்சியோபல்ரி ஏரி
கெச்சியோபல்ரி ஏரி (இந்தியா)
அமைவிடம்சிக்கிம்
ஆள்கூறுகள்27°21′00″N 88°11′19″E / 27.3500°N 88.1886°E / 27.3500; 88.1886
ஏரி வகைபுனிதமானது
முதன்மை வரத்துஇரண்டு வற்றாத மற்றும் ஐந்து பருவகால நீரோடை
முதன்மை வெளியேற்றம்ஒன்று
வடிநிலப் பரப்பு12 km2 (4.6 sq mi)
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு3.79 எக்டேர்கள் (9.4 ஏக்கர்கள்)
சராசரி ஆழம்7.2 m (24 அடி)
அதிகபட்ச ஆழம்11.2 m (37 அடி)
நீர்க் கனவளவு272,880 கன சதுர மீட்டர்கள் (9,637,000 cu ft)
கடல்மட்டத்திலிருந்து உயரம்1,700 m (5,600 அடி)
Islandsஏதுமில்லை
குடியேற்றங்கள்கெச்சியோபல்ரி கிராமம், யூக்சோம் மற்றும் கெய்சிங்

பெல்லிங் நகரின் வடமேற்கில் 34 கிலோமீட்டர்கள் (21 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் இருவருக்கும் புனிதமானது. மேலும் இது ஒரு விருப்பத்தை நிறைவேற்றும் ஏரியாக நம்பப்படுகிறது. ஏரியின் உள்ளூர் பெயர் ஷோ டிஸோ ஷோ, அதாவது "ஓ லேடி, இங்கே உட்காருங்கள்". ஏரியின் பிரபலமாக அறியப்பட்ட பெயர், அதன் இருப்பிடத்தை கருத்தில் கொண்டு கெச்சியோபல்ரி ஏரி என அழைக்கப்படுகிறது. இது கெச்சியோபல்ரி மலையின் மத்தியில் அமைந்துள்ளது. இது ஒரு புனிதமான மலையாகவும் கருதப்படுகிறது.[2][3][4][5][6][7]

அரிசி பள்ளத்தாக்கு என்று பொருள்படும் "தெமாசாங்" பள்ளத்தாக்கின் மிகவும் மதிக்கப்படும் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த ஏரி உள்ளது. இந்த நிலப்பரப்பு பௌத்த அறிஞர் பத்மசாம்பவரால் ஆசீர்வதிக்கப்பட்ட மறைக்கப்பட்ட பொக்கிஷங்களின் நிலம் என்றும் அழைக்கப்படுகிறது.[2]

யூக்சோமில் உள்ள துப்டி மடாலயம், பெமயாங்ட்சே மடாலயம், ராப்டென்ட்சே இடிபாடுகள், சங்கா சோலிங் மடாலயம் மற்றும் தசிடிங் மடாலயம் ஆகியவற்றை உள்ளடக்கிய பௌத்த மத யாத்திரை சுற்றுகளின் ஒரு பகுதியாக கெச்சியோபல்ரி ஏரி உள்ளது.[2][8]ஏரியின் ஒரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், ஏரியின் மீது இலைகள் மிதக்க அனுமதிக்கப்படுவதில்லை. இது ஏரியின் மேற்பரப்பில் விழுந்தவுடன் அவற்றை பறவைகளால் எடுக்கப்படுகிறது.[5][7]

கெச்சியோபல்ரி ஏரி மற்றும் கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா ஆகியவை பல்லுயிர் கண்ணோட்டத்தில் சூழலியல் சுற்றுலா மற்றும் புனித யாத்திரை ஆகியவை அத்தியாவசியமான இடங்களாக பாதுகாக்கப்படுகின்றன.[1] இதன் விளைவாக, இவற்றின் பொழுதுபோக்கு மற்றும் புனிதமான மதிப்புகள் மேம்படுத்தப்படுகின்றன.[9]

திருவிழா

தொகு

புனிதமான இந்த ஏரி "ஆசைகளை நிறைவேற்றும் ஏரி" என்று அறியப்படுவதால் இதைச்சுற்றி, நாட்டுப்புறக் கதைகள் மற்றும் புராணக்கதைகள் பல உள்ளன. நாட்டுப்புறக் கதைகள் ஆழ்ந்த மத ஆர்வத்தை உருவாக்கியுள்ளன. இதன் விளைவாக ஏரியின் நீர் சடங்குககளைச் செய்ய மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றான மதக் கண்காட்சி, மாகே பூர்ணேயில் (மார்ச்/ஏப்ரல்) இரண்டு நாட்களுக்கு இங்கு நடத்தப்படுகிறது. இதில் சிக்கிம், பூட்டான், நேபாளம் மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் ஏரிக்கு உணவுப் பொருட்களை வழங்குகிறார்கள். மேலும்,ஏரியின் நீரை பிரசாதமாக எடுத்துச் செல்கிறார்கள். சிவன் "ஏரிக்குள் ஆழ்ந்த தியானத்தில்" இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். [9] இந்த திருவிழாவின் போது, புனித யாத்ரீகர்கள் மூங்கில் படகுகளில் கடாக்களால் கட்டப்பட்ட வெண்ணெய் விளக்குகளை ஏரியில் மிதக்க விடுகிறார்கள். மாலை நேரங்களில் பக்தியின் அடையாளமாக பிரார்த்தனைகள் செய்து, பல உணவுப் பிரசாதங்களாஇ அனைவருக்கும் அளிக்கிறார்கள்.

சோ-சோ என்பது, ஏலக்காய் அறுவடைக்குப் பிறகு, மக்களுக்கு உணவு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அக்டோபர் மாதத்தில் இங்கு கொண்டாடப்படும் மற்றொரு திருவிழா ஆகும்.

இதனையும் பார்க்கவும்

தொகு

புகைப்படங்கள்

தொகு

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. 1.0 1.1 O'Neill, Alexander (25 February 2020). "Establishing Ecological Baselines Around a Temperate Himalayan Peatland". Wetlands Ecology & Management 28 (2): 375–388. doi:10.1007/s11273-020-09710-7. 
  2. 2.0 2.1 2.2 Jain, Alka; H. Birkumar Singh; S. C. Rai; E. Sharma (2004). "Folklores of Sacred Khecheopalri Lake in the Sikkim Himalaya of India: A Plea for Conservation". Asian Folklore Studies (Nanzan University) 63. https://asianethnology.org/articles/508. பார்த்த நாள்: 2023-01-02. 
  3. "Wetland Inventory" (PDF). Sacred Khechopalri Lake. Envis: National Informatics Centre. p. 369. Archived from the original (PDF) on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2010-05-07.
  4. Silas, Sandeep (2005). Discover India by Rail. Sterling Publishers Pvt. Ltd. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-207-2939-0. பார்க்கப்பட்ட நாள் 2010-05-06.
  5. 5.0 5.1 Bindloss, Joe; Sarina Singh (2007). India. Lonely Planet. pp. 585. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74104-308-2. பார்க்கப்பட்ட நாள் 2010-05-06. Yuksom.
  6. Bradnock, Roma (2004). Footprint India. Footprint Travel Guides. p. 634. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-904777-00-7. பார்க்கப்பட்ட நாள் 2010-05-06.
  7. 7.0 7.1 "West Sikkim". Sikkim Online. Archived from the original on 25 April 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-05-06.
  8. Choudhury, Maitreyee (2006). Sikkim: Geographical Perspects. Mittal Publications. pp. 80–81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8324-158-1. பார்க்கப்பட்ட நாள் 2010-05-05.
  9. 9.0 9.1 "Our View". Brief Overview of Valuation of Ecotourlsm in the S1kkim Himalaya. Environment Centre on Ecotourism in Sikkim: national Informatics Centre. Archived from the original on 2010-07-28. பார்க்கப்பட்ட நாள் 2010-05-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெச்சியோபல்ரி_ஏரி&oldid=3794962" இலிருந்து மீள்விக்கப்பட்டது