கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா, இந்திய மாநிலமான சிக்கிமில் உள்ளது. இங்கிருக்கும் கஞ்சஞ்சங்கா மலையினால் இந்த பூங்காவுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இந்த மலைச்சிகரம் 8,586 மீட்டர்கள் (28,169 ft) உயரத்தை உடையது. உலகத்திலேயே உயரமான மூன்றாவது மலைச் சிகரமாக உள்ளது. இந்த பூங்கா 849.5 km2 (328.0 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மான், பனிச்சிறுத்தை, இமயமலை வரையாடு ஆகிய விலங்குகள் வாழ்கின்றன.
கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | வடக்கு சிக்கிம் மாவட்டம், சிக்கிம் |
கிட்டிய நகரம் | சுங்தங் |
ஆள்கூறுகள் | 27°42′0″N 88°08′0″E / 27.70000°N 88.13333°Eஆள்கூறுகள்: 27°42′0″N 88°08′0″E / 27.70000°N 88.13333°E |
பரப்பளவு | 1,784 km2 (689 sq mi) |
நிறுவப்பட்டது | 1977 |
வருகையாளர்கள் | NA (in NA) |
நிருவாக அமைப்பு | சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம், இந்திய அரசு |
இந்த பூங்கா வடக்கு சிக்கிம் மாவட்டத்திலும், மேற்கு சிக்கிம் மாவட்டத்திலும் அமைந்துள்ளது.
தாவரங்கள்தொகு
இங்கு கருவாலி மரம், ஃபிர், மேப்பிள், உள்ளிட்ட தாவரங்களும், மருத்துவ மூலிகைச் செடிகளும் உள்ளன.
விலங்குகள்தொகு
இங்கு பனிச்சிறுத்தை, இமயமலை வரையாடு, செந்நாய், தேன் கரடி, இமாலய கருங்கரடி, சிவப்பு பாண்டா, கண்ணாடி விரியன் உள்ளிட்டவை வாழ்கின்றன.[1]
போக்குவரத்துதொகு
- அருகிலுள்ள விமான நிலையங்கள்:
- அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்: புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம், சிலிகுரி (221 km (137 mi))
- அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை: தே.நே 31ஏ
- அருகிலுள்ள நகரம்: கேங்டாக்
இணைப்புகள்தொகு
- Goecha La : In search of Kangchenjunga by George ThengummoottilDocumentary on Goechala Trek inside Kangchenjunga National Park