கெரார்டு எர்ட்டில்

கெர்ரார்டு எர்ட்டில் (Gerhard Ertl) (பிறப்பு. அக்டோபர் 10 1936, பிறப்பிடம் இசுடுட்கார்ட்,செருமனி) செருமானிய நாட்டு இயல்பிய வேதியியல் அறிஞர். இவர் 2007 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பெற்றார். இவர் புகழ்பெற்ற மாக்சு பிளாங்க் கெசெல்சாவ்ட்டின் விரிட்சு ஆபர் இன்சுட்டியூட்டில் (Fritz-Haber-Institut der Max-Planck-Gesellschaft) ஓய்வுபெற்ற இயல்பிய வேதியியல் பேராசிரியர் ஆவார்.

கெரார்டு எர்ட்டில்
பிறப்பு10 அக்டோபர் 1936 (அகவை 88)
இசுடுட்கார்ட்
படித்த இடங்கள்Johannes-Kepler-Gymnasium, Leibniz University Hannover
பணிஇயற்பியலறிஞர், வேதியியலாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர்
விருதுகள்Knight Commander's Cross of the Order of Merit of the Federal Republic of Germany, வேதியியலுக்கான நோபல் பரிசு, வேதியியல் வுல்ஃப் பரிசுகள், Honorary doctor of the Humboldt University of Berlin, Liebig Medal, honorary doctor of the Maria Curie-Skłodowska University, honorary doctor of the Ruhr University Bochum, honorary doctor of the University of Münster, honorary doctor of the Katholieke Universiteit Leuven, Bourke Award, Medard W. Welch Award, EPS Europhysics Prize, honorary doctor of Comenius University
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்வேதியியல்
நிறுவனங்கள்
  • Free University Berlin
  • Humboldt University of Berlin
ஆய்வு நெறியாளர்Heinz Gerischer
முனைவர் பட்ட மாணவர்கள்Peter Strasser

பிறப்பும் படிப்பும்

தொகு

கெரார்டு எர்ட்டில் செர்மனியில் உள்ள இசுடுட்கார்ட்டில் அக்டோபர் 10, 1936ல் பிறந்தார். 1955 முதல் 1957 வரை இசுடுட்கார்ட் பல்கலைக்கழகத்திலும், பின்னர் 1957-1958 இடைப்பட்ட பகுதியில் பாரிசுப் பல்கலைக்கழகத்திலும், அதன் பின்னர் 1958-1959 ஆண்டுகளில் லூடுவிக் மாக்சிமிலியன் பல்கலைக்கழகத்திலும் படித்தார். 1961ல் முதுகலைக்கு இணையான இயற்பியல் டிப்ளோமாவை இசுட்டுட்கார்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றார். அப்பொழுது அவருக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்த ஐன்ஸ் கெரிழ்சர் (Heinz Gerischer) என்பவருடன் இவரும் புறப்பட்டு மியூனிக்கில் உள்ள மியூனிக் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று அங்கு ஆய்வு செய்து 1965ல் முனைவர் (பி.எச்.டி) பட்டம் பெற்றார்.

ஆய்வு

தொகு

வினையூக்கியின் வழி இரும்பின் மீது அம்மோனியாவை உற்பத்தி செய்யும் ஆபர்-பாழ்ச் செய்முறையில் நிகழும் துல்லிய மூலக்கூறு அளவிலான வேதியியல் வினைகளைக் கண்டறிந்ததற்காகவும், பலேடியம் மீது வினையூக்கிவழி கார்பன் மோனாக்சைடை ஆக்ஸைடாக்கும் முறையைப் பற்றிய இவருடைய கண்டுபிடிப்புகளுக்காகவும் கெர்ரார்டு எர்ட்டில் புகழ் பெற்றவர். பலேடியப் பரப்பின் மீது மாறிமாறி அலைவுறும் வேதியியல் வினைகளைத் துல்லியமாய் இவர் கண்டறிந்தார். நுண்ணோக்கிவழி காணும் ஒளிதூண்டு எதிர்மின்னி தெறிப்புகளின் அளவீட்டின் படி பலேடிய மேற்பரப்பில் உள்ள அணுக்களின் நுண்ணிய அசைவுகளை முதன்முறையாகக் கண்டறிந்தார்.

இவர் 1998ல் அங்கேரியில் பிறந்து தற்பொழுது பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழத்தில் பேராசிரியாராக இருக்கும் கேபார் ஏ. சோமார்சியாய் (Gabor A. Somorjai) என்பாருடன் வேதியியல் துறையின் வுல்ஃவ் பரிசு பெற்றார். இப்பரிசை, படிக மேற்பரப்பில் வினையூக்கிவழி நிகழும் வேதியியல் வினைகளைப் பற்றி இவர்கள்செய்த ஆய்வுகளுக்காக அளிததனர் [1]

கெர்ரார்டு எர்ட்டில் 2007 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை திண்மங்களின் மேற்பரப்பில் நிகழும் வேதியியல் வினைகளைக் கண்டறிந்ததற்காக நோபல் குழு அளைத்தது. இப்பரிசு ஐக்கிய அமெரிக்கா டாலர் $1.5 மில்லியன் மதிப்புடையது[2]

வெளியீடுகள்

தொகு

கெர்ரார்டு எர்ட்டில் தொகுப்பாசிரியர்களில் ஒருவராக இருந்து வெளியான நூல்: Handbook of Heterogeneous Catalysis

மேற்கோள்கள்

தொகு
  1. "The Wolf Prize in Chemistry". Archived from the original on 2007-05-17. பார்க்கப்பட்ட நாள் 2007-10-10.
  2. "Cnn.com, Nobel for ozone layer scientist". Archived from the original on 2007-10-12. பார்க்கப்பட்ட நாள் 2007-10-10.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெரார்டு_எர்ட்டில்&oldid=3551184" இலிருந்து மீள்விக்கப்பட்டது