கெரூர் பள்ளிவாசல்
கெரூர் பள்ளிவாசல் (Kherur Mosque) கெரௌல் பள்ளிவாசல் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள முர்சிதாபா மாவட்டத்தின் ஜாங்கிபூர் துணைப்பிரிவில் உள்ள சாகர்திகி சமூக மேம்ப்பாட்டுத் தொகுதியில் உள்ள கெரூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
கெரூர் பள்ளிவாசல் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கெரூர், முர்சிதாபாத் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 24°20′57″N 88°04′23″E / 24.349291°N 88.073112°E |
சமயம் | இசுலாம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1495 |
தலைமை | இரபாத் கான் |
இடம்
தொகுகெரூர் பள்ளிவாசல் 24.349291°N 88.073112°E இல் அமைந்துள்ளது.
வரலாறு
தொகுசெங்கலால் கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல் ஒரு பிரார்த்தனை அறையும் மற்றும் முன் அறையையும் கொண்டுள்ளது. இது அலாவுதீன் உசைன் சா ஆட்சியின் போது 1495 இல் இரபாத் கான் என்பவரால் கட்டப்பட்டது. [1] செவ்வக வடிவில், இது 2 ஏக்கர் (0.81 எக்டர்) பரப்பளவில் பரவியுள்ளது. [2] [3]
இந்தப் பள்ளிவாசல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும். [4]
அமிதாபா குப்தா தனது புகைப்படக் கலைஞர் தனது குறிப்பில் எழுதுகிறார்: பள்ளிவாசலில் உள்ள இரண்டு கல்வெட்டுகளின் அடிப்படையில் அலாவுத்-தின் உசைன் சாவின் ஆட்சிக் காலத்தில் கெரௌல் என்றழைக்கப்படும் கெரூரில் கி.பி 1495 இல் இரபாத் கானால் செங்கல்லால் கட்டப்பட்ட பள்ளிவாசலில், ஒரு குவிமாடம் கொண்ட சதுர பிரார்த்தனை அறை மற்றும் நான்கு மூலைகளிலும் நான்கு மினார்களுடன் முன்பக்கத்தில் மூன்று குவிமாடத்துடன் கட்டப்பட்டுள்ளது. 1897 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் பிரதான பிரார்த்தனை அறையின் அரைக்கோளக் குவிமாடம் கீழே விழுந்துவிட்டது. இந்த பள்ளிவாசல் முற்றிலும் செங்கற்களால் எந்த ஒரு கல் முகமும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. சுவரில் டெரகோட்டா அலங்காரம் இருப்பதால் தனித்துவம் வாய்ந்தது. ஒரு சில பள்ளிவாசல்கள் மட்டுமே சுவர்களில் இத்தகைய அலங்காரங்களைக் கொண்டுள்ளன. மேலும் அவை 17 முதல் 19 ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட வங்காளத்தின் புகழ்பெற்ற சுடுமண் கோயில்களுக்கு முந்தையவை.