கெவ்ரா
கெவ்ரா (Kewra) என்பது தாழம்பூச் செடியின் நறுமணமுள்ள ஆண் மலரில் இருந்து காய்ச்சி எடுக்கப்படும் ஓர் அத்தியாவசிய எண்ணெய் ஆகும். கியோரா அல்லது கெவ்டா என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. தாழம்பூச் செடி வெப்பமண்டல ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆத்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தாவர இனமாகும். மேலும் இந்நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில் இந்த எண்ணெய் ஒரு சுவையூட்டும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. [1]
தாழம்பூ மலர் கெவ்ரா எண்ணெயில் ஒரு முக்கிய மூலப்பொருளாகும். தெற்காசியாவில், குறிப்பாக இசுலாம் சமூகங்களுடன் தொடர்புடைய சிறப்பு சந்தர்ப்ப உணவுகளில் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தாழம்பூக்களும் ரோசா மலர்களைப் போலவே இனிமையான வாசனையைக் கொண்டுள்ளன, ஆனால் தாழையில் அதிக அளவில் பழங்கள் கிடைக்கிறது. சில சமூகங்களில் வழிபடப்படும் இந்து தெய்வமான மானசாவின் வழிபாட்டில் தாழம் பூக்கள் மற்றும் இலைகள் அவசியம் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தாழம் பூக்களில் சுமார் 95% கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பெர்காம்பூர் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படுகிறது. சத்ரபூர், இரங்கேயிலுண்டா, பத்ராபூர் மற்றும் சிகிடியின் கடற்கரைப் பகுதிகள் நறுமண தாழம்பூத் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றவையாகும். விவாதிக்கக்கூடிய வகையில், கடலோரப் பகுதிகளிலிருந்து வரும் மலர்கள் ஒரு நேர்த்தியான மலர்க் குறிப்பைக் கொண்டுள்ளன. இவை உள்நாட்டு வகைகளுக்குப் போட்டியாகவும் உள்ளன. மிகவும் பிரபலமான வகைகள் உள்ளூரிலும் கோபால்பூரிலும் பயிரிடப்படுகின்றன. கஞ்சம் மாவட்டத்தில் தாழைப் பூ சாகுபடி ஒரு முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது. கிட்டத்தட்ட 200 பதிவு செய்யப்பட்ட தாழை வடித்தல் தொழிற்சாலைகள் இங்குள்ளன. பாரம்பரிய இந்திய வாசனை திரவியங்களிலும், இட்டார் எண்ணெயிலும் கெவ்ரா எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
வேதியியல் இயைபு
தொகுகெவ்ரா எண்ணெய் தாழை மஞ்சரிகளின் நீர் வடித்தல் மூலம் பெறப்படுகின்றன. 2-பீனெத்தில் மெத்தில் ஈதர் (65.6–75.4%), டெர்பினென்-4-ஓல் (11.7–19.5%), பி-சைமீன் (1.0–3.1%) மற்றும் ஆல்பா டெர்பினோல் (1.2–2.9) %) போன்றவை கெவ்டா எண்ணெயின் முக்கிய கூறுகளாகும் [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pandanus odoratissimus (Kewda): A Review on Ethnopharmacology, Phytochemistry, and Nutritional Aspects". Adv. Pharmacol. Sci. 2014: 120895. 22 December 2014. doi:10.1155/2014/120895. பப்மெட்:25949238.
- ↑ Mishra, Reeta; Dash, PK; Rao, YR (2000). "Chemical Composition of the Essential Oils of Kewda and Ketaki". Journal of Essential Oil Research 12 (2): 175–178. doi:10.1080/10412905.2000.9699491. https://www.tandfonline.com/doi/abs/10.1080/10412905.2000.9699491.