கேசர்பாய் கெர்கர்

கேசர்பாய் கெர்கர் (Kesarbai Kerkar) (பிறப்பு: 1892 சூலை 13 - இறப்பு: 1977 செப்டம்பர் 16) இவர் ஜெய்ப்பூர்-அட்ரௌலி கரானாவின் இந்துஸ்தானி பாடகராவார்.[1] கரானாவின் நிறுவனர் உஸ்தாத் அல்லாடியா கானிடம் (1855-1946) தனது பதினாறாவது வயதில் சீடராக சேர்ந்தார். பின்னர், இவர் 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மிகவும் பிரபலமான காயல் பாடகர்களில் ஒருவரானார்.[2][3][4]

கேசர்பாய் கெர்கர்
1953 மார்ச் மாதம் கேசர்பாய் கெர்கர் சங்கீத நாடக அகாதமி விருதினை பெற்றார்.
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கேசர்பாய் கெர்கர்
பிறப்பு(1892-07-13)13 சூலை 1892
பிறப்பிடம்கெரி, கோவா (மாநிலம்)
இறப்பு16 செப்டம்பர் 1977(1977-09-16) (அகவை 85)
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை – காயல்
தொழில்(கள்)இந்துஸ்தானி பாடகர்
இசைத்துறையில்1930-1964

1953 ஆம் ஆண்டில் அவருக்கு சங்கீத நாடக அகாதமி விருதும், 1969 ஆம் ஆண்டில் இந்தியாவின் குடிமகன்களின் மூன்றாவது மிக உயர்ந்த பத்ம பூசண் விருதினைப் பெற்றார்.[5]

சுயசரிதை

தொகு

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி

தொகு

கோவாவின் வடக்கு கோவா போண்டா வட்டத்திலுள்ள (அப்போது ஒரு போர்த்துகீசிய காலனி) சிறிய கிராமமான கெரி ("குவெரிம்" என்ற ஊரில் அழைக்கப்படுகிறது), ஒரு குடும்பத்தில் பிறந்தார், எட்டு வயதில் கெர்கரின் குடும்பம் கோலாப்பூருக்கு குடிபெயர்ந்தது. அங்கு இவர் கரானாபாடகர் அப்துல் கரீம் கான் என்பவரிடம் எட்டு மாதங்கள் படித்தார். பின்னர், கோவாவுக்குத் திரும்பிய இவர் இலம்கானுக்கு சென்று, பாடகர் ராம்கிருட்டிணபுவ வாசிடம் (1871-1945) கரானாவை பயின்றார்.

கேரி ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார் இருந்து ஒரு குடும்பத்தில் போண்டா தாலுகா இன் , சென்றார் எட்டு கேர்க்கர் வயதில், (பின்னர் ஒரு போர்த்துகீசியம் காலனி) கோலாப்பூர் அவள் எட்டு மாத படித்தார், . கோவாவுக்குத் திரும்பியதும், அவர் லம்கானுக்கு விஜயம் செய்தபோது, பாடகர் ராம்கிருட்டிணபுவ வாசி என்பவரிடம் (1871-1945) படித்தார்.[2][6]

இதற்கிடையில், பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் மும்பை நகரம் நாட்டின் வணிக மற்றும் வர்த்தக மையமாக வேகமாக வளர்ந்து வந்தது. வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவைச் சேர்ந்த பல இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள், சுதேச மாநிலங்களின் ஆதரவு குறைந்த்ததால் நகரத்திற்கு குடிபெயரத் தொடங்கினர். கெர்கரும் தனது 16 வயதில் இவரது தாய் மற்றும் மாமாவுடன் மும்பைக்கு குடிபெயர்ந்தார். ஒரு பணக்கார உள்ளூர் தொழிலதிபரான சேத் விட்டல்தாசு துவாரகதாசு என்பவர், பாட்டியாலா மாநிலத்தின் அரசவையின் இசைக்கலைஞம், சித்தார் இசைக்கலைஞருமான பர்கத் உல்லா கான் என்பவரிடம் இவரை சேர்க்க உதவினார். கான், இரண்டு வருடங்களுக்கு இடைவிடாது இவருக்குக் கற்பித்தார். பின்னர், கான், மைசூர் மாநிலத்தில் நீதிமன்ற இசைக்கலைஞரானபோது, கெர்கர் பாஸ்கர்புவா பக்கலே (1869-1922) மற்றும் ராம்கிருட்டிணபுவா வாசி ஆகியோரின் கீழ் சிறுது காலம் பயிற்சி பெற்றார்.[7]

இறுதியில் 1921 ஆம் ஆண்டு தொடங்கி ஜெய்ப்பூர் அட்ரௌலி கரானாவின் நிறுவனர் உஸ்தாத் அல்லாடியா கானுக்கு (1855-1946) சீடராக முடிவடைந்து. பதினொரு ஆண்டுகள் தொடர்ந்து அவருக்கு கீழ் கடுமையாக பயிற்சி பெற்றார். 1930 ஆம் ஆண்டில் இவர் தொழில் ரீதியாக பாடத் தொடங்கினாலும், கான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், 1946 இல் அவர் இறக்கும் வரை தொடர்ந்து கற்றுக்கொண்டேயிருந்தார்.[7]

தொழில்

தொகு

கெர்கர் இறுதியில் பரந்த புகழைப் பெற்றார். பிரபுத்துவ பார்வையாளர்களுக்காக தவறாமல் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். அவர் தனது வேலையின் பிரதிநிதித்துவம் குறித்து மிகவும் குறிப்பாக இருந்தார்

இதன் விளைவாக எச்.எம்.வி மற்றும் பிராட்காஸ்ட் லேபிள்களுக்கு சில 78 ஆர்.பி.எம் பதிவுகளை மட்டுமே செய்துள்ளார். காலப்போக்கில், கெர்கர் தனது தலைமுறையின் திறமையான காயல் பாடகியாக ஆனார்.[2]

பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த இந்திய அங்கீகாரமான சங்கீத நாடக அகாதமி விருது 1953 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[8] இதைத் தொடர்ந்து, இந்திய அரசு 1969இல் பத்ம பூசண் வழங்கி அலங்கரித்தது.[9] அதே ஆண்டில் மகாராட்டிரா அரசு இவருக்கு "இராச்சிய கயிகா" என்ற பட்டத்தை வழங்கியது. இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூர் (1861-1941) கெர்கரின் பாடலை மிகவும் விரும்பியதாகக் கூறப்படுகிறது. இவர் 1963-64ல் பொதுப் பாடல்களிலிருந்து ஓய்வு பெற்றார்.

குறிப்புகள்

தொகு
  1. Babanarāva Haḷadaṇakara (1 January 2001). Aesthetics of Agra and Jaipur Traditions. Popular Prakashan. pp. 33–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7154-685-5.
  2. 2.0 2.1 2.2 Bruno Nettl. The Garland Encyclopedia of World Music: South Asia : the Indian subcontinent. Taylor & Francis. pp. 413–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8240-4946-1.
  3. Vinayak Purohit. Arts of Transitional India Twentieth Century. Popular Prakashan. p. 908. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86132-138-4.
  4. Surashri Kesarbai Kerkar பரணிடப்பட்டது 2021-05-11 at the வந்தவழி இயந்திரம். Retrieved on 2009-12-27
  5. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. J. Clement Vaz. Profiles of Eminent Goans, Past and Present. Concept Publishing Company. pp. 78–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-619-2.
  7. 7.0 7.1 "Kesarbai Kerkar". Underscore Records. பார்க்கப்பட்ட நாள் 2014-09-13.
  8. "SNA: List of Akademi Awardees". Sangeet Natak Akademi Official website. Archived from the original on 30 May 2015.
  9. "Padma Awards Directory (1954–2013)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 1 பிப்ரவரி 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help); Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசர்பாய்_கெர்கர்&oldid=3929233" இலிருந்து மீள்விக்கப்பட்டது