கேசர் தா தாபா

கேசர் தா தாபா (Kesar Da Dhaba) என்பது இந்தியாவின் பஞ்சாப், அமிர்தசரசில் உள்ள ஒரு சைவ பஞ்சாபி தாபா ஆகும்.[1] இது 1916ஆம் ஆண்டில் லாகூர் அருகே சேகுபுராவில் பஞ்சாபி இந்துவான லாலா கேசர் மால் என்பவரால் துவங்கப்பட்ட பருப்பு மற்றும் ரொட்டி விற்கும் சிறிய உணவகமாக உருவானது.[2] 1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இது அமிர்தசரசு நகருக்கு மாற்றப்பட்டது. லாலா லஜபதி ராய், ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, பத்மினி கோலாபுரி, யாஷ் சோப்ரா மற்றும் ராஜேஷ் கன்னா ஆகியோர் இங்குச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.[3] இது நகர அரங்கம் அருகே சௌக் பாசியனில் ஒரு குறுகிய பாதையில் உள்ள ஒரு சிறிய தாபா.

இந்த உணவகத்தின் தனிச்சிறப்பு உணவு தால் மக்கானி (வெண்ணெய் பருப்பு).[4] இங்கு மண் பாத்திரத்தில் வழங்கப்படும் பிர்னிக்காகவும் நன்கு அறியப்படுகிறது.[5]

அந்தோணி போர்தைன் தனது அந்தோணி போர்தைன்: தெரியாத பகுதிகள் எனும் உணவுத் தொடரின் ஒரு பகுதிக்காக இந்த உணவகத்திற்குச் சென்றார்.[6]

சைஃப் அலிகானின் 2017 திரைப்படமான செப் படத்தின் சில காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டன.[7]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Outlook, Volume 46, Issues 13-25, 2006, p. 80
  2. Time Out India: Perfect Places to Stay, Eat and Explore, By Time Out, 2010, p. 276
  3. "This 100-year-old dhaba in Punjab is most sought after for spicy 'dal makhani, India Samvad, 19 Oct 2016". Archived from the original on 28 April 2017. பார்க்கப்பட்ட நாள் 27 April 2017.
  4. Vora, Shivani (18 March 2014). "A Culinary Pilgrimage to Punjab By SHIVANI VORA, New York Times, MARCH 18, 2014". The New York Times இம் மூலத்தில் இருந்து 22 July 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160722072253/http://www.nytimes.com/2014/03/23/travel/a-culinary-pilgrimage-to-punjab.html?_r=0. 
  5. Upadhyay, Karishma (2 July 2016). "Eating through Amritsar". The Hindu. http://www.thehindu.com/features/magazine/Eating-through-Amritsar/article14466846.ece. 
  6. "SEASON 3, EPISODE 1 Punjab, India". CNN. Archived from the original on 20 October 2014. பார்க்கப்பட்ட நாள் 22 October 2014.
  7. This Amritsar dhaba has a century-old recipe of ‘mah ki daal’ and ‘lachcha parantha’, Divya A, Indian Express, February 3, 2019

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசர்_தா_தாபா&oldid=3895305" இலிருந்து மீள்விக்கப்பட்டது