பஞ்சாபி சந்து அல்வா கராச்சிவாலா

மகாராட்டிரா மாநிலம் மும்பை மாநகராட்சியில் உள்ள அல்வா கடை

பஞ்சாபி சந்து அல்வா கராச்சிவாலா (Punjabi Chandu Halwai Karachiwala) என்பது மகாராட்டிர மாநிலம் மும்பை மாநகராட்சியில் உள்ள ஒரு அல்வா கடை ஆகும். முதன் முதலில் 1896ஆம் ஆண்டு பாக்கித்தான் நாட்டின் கராச்சி நகரத்தில்[1] பஞ்சாபி காத்ரியைச் சேர்ந்த சந்துலால் பாக்லால் என்பவரால் நிறுவப்பட்டது. [2]

பாம்பே அல்வா (சோள மாவு அல்வா)

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இக்கடையின் உரிமையாளர்கள் மும்பை நகரத்திற்கு சென்றனர். [3] பாம்பே அல்வா என்றும் அழைக்கப்படும் இந்த கராச்சி அல்வா, கராச்சி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த அல்வாகாரர்களினால் பிரபலமானது.

இவர்கள் பல தயாரிப்புகள் பாரம்பரியமாக தயார்செய்த போதிலும் எப்போதாவது புதிய இனிப்புகளை உருவாக்குகின்றனர்.[4]

அகதிகளுக்கு உணவளித்தல்

தொகு

பாக்கித்தானுக்கான முதல் உயர் ஆணையர் சிறீபிரகாசா, பிரிவினையின் போது 1947ஆம் ஆண்டு கராச்சியில் அகதிகளுக்கு உணவளிப்பதில் பிரச்சினையை எதிர்கொண்டபோது இந்த உணவகத்தினர் உணவுக்கான கட்டணத்தை பெற்றுக்கொள்ள மறுத்ததை நினைவு கூர்ந்தார்.[5]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ramananda Chatterjee (1938). The Modern Review (Prabasi Press Private, Limited) 64: 91. 
  2. Sweet dreams are made of this, Meher Marfatia, Mid-Day, 17 July,2022
  3. Pakistan: Birth and Early Days, Sri Prakāśa, Hindustan times, Meenakshi Prakashan, 1965, p. 67, 68
  4. Mugdha Variyar (23 September 2012). "Modaks with a twist flavour of this year's Ganeshotsav". Hindustan Times (Mumbai) இம் மூலத்தில் இருந்து 13 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140313022755/http://www.hindustantimes.com/india-news/mumbai/modaks-with-a-twist-flavour-of-this-year-s-ganeshotsav/article1-934289.aspx. பார்த்த நாள்: 16 February 2014. 
  5. मौत को बुलावा था हिन्दू पोशाक पहनना http://panchjanya.com/arch/2000/2/6/File19.htm

வெளி இணைப்புகள்

தொகு