பாம்பே அல்வா

இந்திய இனிப்பு வகைஅல்வா

பாம்பே அல்வா ஒரு பிரபலமான இந்திய நாட்டின் இனிப்பு ஆகும். இந்த அல்வா கராச்சி அல்வா அல்லது பாம்பே கராச்சி அல்வா என்றும் அழைக்கப்படுகிறது.[1][2] சோள மாவு, தண்ணீர், வெண்ணெய் அல்லது நெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றால் ஆனது பாம்பே அல்வா. பாம்பே அல்வா பொதுவாக ஆரஞ்சு, சிவப்பு அல்லது பச்சை நிறத்திலிருக்கும். மேலும் ஏலக்காய் மற்றும் நெய்யுடன் சேர்த்து தயாரிக்கப்படும் போது சுவையாக இருக்கும். இது நீண்ட காலம் கெட்டுபோகாமல் இருக்கும் தன்மையுடையது.[3]

பாம்பே அல்வா (சோள மாவு அல்வா)

பாக்கித்தானின் கராச்சி என்ற நகரத்தில் உருவானது இந்த அல்வா, ஆனால் மும்பையில் (அப்போது பாம்பே) பிரபலமடைந்தது. இரண்டும் துறைமுக நகரங்கள் ஆகும். பாக்கித்தான் நாட்டின் கராச்சி பகுதியிலிருந்து குடியேறியவர்கள் மும்பையில் குடியேறினர்.[4] இந்தியப் பிரிவினைக்குப் பிறகு கராச்சியில் குடிபெயர்ந்த அல்வாய்கள் எனப்படும் இனிப்பு தயாரிப்பாளர்களால் இந்த இனிப்பு பம்பாய்க்கு கொண்டு வரப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டது.[5] [6]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பே_அல்வா&oldid=3758293" இலிருந்து மீள்விக்கப்பட்டது