கேப்டன் ஹர்பஜன் சிங்

கேப்டன் ஹர்பஜன் சிங் இந்திய இராணுவ வீரர்

கேப்டன் பாபா ஹர்பஜன் சிங் (30 ஆகஸ்டு 1946 – 4 அக்டோபர் 1968)[1] ஒரு இந்திய இராணுவ போர் வீரர் ஆவார். சேவை காலம்: 30 ஜூன் 1965 - 1 டிசம்பர் 2006 (மரணத்திற்குப் பின் ஓய்வு). அவரது நினைவாக ஒரு ஆலயத்தைக் கட்டியது இந்திய ராணுவம். வீரர்களால் அவர் "நாதுலாவின் ஹீரோ" என்று போற்றப்படுகிறார். அவரை புனிதர் அல்லது கடவுள் நிலை பெற்றவர் என குறிப்பிடும் சொல்லான பாபா என்று அவரது விசுவாசிகளால் அழைக்கப்படுகிறார். அவரது விசுவாசமுள்ள முக்கியமாக இந்திய இராணுவ வீரர்கள் கிழக்கு இமயமலை பகுதியில் அமைந்துள்ள நாதூ லா கணவாய் மற்றும் சிக்கிம் மாநிலத்திற்கும் திபெத் தன்னாட்சிப் பகுதிக்கும் இடையிலான இந்திய-சீன எல்லையில் அவரது ஆன்மா ஒவ்வொரு இராணுவ வீரர்களையும் பாதுகாக்கிறது என்று நம்புகிறார்கள். பெரும்பாலான புனிதர்களைப் போலவே பாபாவும் அவரை வணங்குபவர்களுக்கு உதவி செய்வார் என்று நம்பப்படுகிறது. அவர் மரணித்த பின்பும் இந்திய நாட்டைப் பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது.

கேப்டன் பாபா ஹர்பஜன் சிங்
பிறப்புஹர்பஜன் சிங்
(1946-08-30)30 ஆகத்து 1946
பாகிஸ்தான்
இறப்பு4 அக்டோபர் 1968(1968-10-04) (அகவை 22)
நாதூ லா கணவாய், சிக்கிம், இந்தியா
தேசியம்இந்தியன்
பணிஇராணுவ வீரர்
ஹர்பஜன் சிங்
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1965 – 2006 (மரணத்திற்குப் பின் ஓய்வு)
தரம் கேப்டன்
பாபா ஹர்பஜன் சிங் ஆலயம்- வெளிப்புற தோற்றம்.

இராணுவ வாழ்க்கை

தொகு

பாபா ஹர்பஜன் சிங் ஒரு சீக்கிய குடும்பத்தில் 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் நாள் அன்று சத்ரானா கிராமத்தில் பிறந்தார் (தற்போதைய பாகிஸ்தானில்). அவர் தனது ஆரம்பக் கல்வியை ஒரு கிராமப் பள்ளியில் முடித்தார், பின்னர் மார்ச் 1965 இல் பஞ்சாப் மாநிலத்தின் பட்டி நகரில் உள்ள தயானந்த் ஆங்கிலோ-வேத கல்லூரி நிர்வாகக் குழுவின் உயர்நிலைப் பள்ளியில் தனது உயர் கல்வி படிப்பை படித்தார். இவர் அமிர்தசரஸ் நகரில் இருந்து ஒரு இராணுவ வீரராக பட்டியலிடப்பட்டு இந்தியப் பஞ்சாப் படைப்பிரிவில் சேர்ந்தார்.[2]

இறப்பு மற்றும் தொடர்புடைய கதைகள்

தொகு

1968 ஆம் ஆண்டில் இவர் கிழக்கு சிக்கிம் பகுதியில் உள்ள நாதூ லா கணவாய் என்ற இடத்தில் இந்திய திரு நாட்டிற்காக தன் இன்னுயிர் நீத்து தியாகம் செய்துள்ளார். 22 வயதே நிறைந்த ஹர்பஜன் சிங்கின் இளவயது மரணமானது ஆன்ம நம்பிக்கை மற்றும் மத வணக்கத்திற்கு உட்பட்டதாகும். இது இந்திய இராணுவ வீரர்களிடையே பிரபலமாகிவிட்டது. அவர் இறந்த பின்பும் இந்திய இராணுவ வீரராக பணிபுரிகிறார் என அவரது கிராம மக்கள், இந்திய இராணுவ வீரர்கள் மற்றும் எல்லையைத் தாண்டி சிக்கிம்-திபெத்துக்கு இடையிலான இந்தோ-சீன எல்லையை பாதுகாக்கும் சீன வீரர்களின் மக்கள் விடுதலை இராணுவம் உட்பட்ட அனைவரும் வெளிப்படையாக நம்புகின்றார்கள்.[3]

அவரது மரணத்தின் அதிகாரப்பூர்வ பதிப்பு என்னவென்றால் 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தோ-சீனா போருக்கு பின்னர் இந்திய இராணுவம், மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற ஒரு சண்டையில் 14,500 அடிகள் (4,400 m) உயரத்தில் உள்ள திபெத் மற்றும் சிக்கிம் இடையே உள்ள நாதூ லா கணவாய் பகுதியில் பாபா ஹர்பஜன் சிங்கின் இறந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.[4]

 
பாபா ஹர்பஜன் சிங்கின் ஆலயத்தில் உள்ள கல்வெட்டு.

இவரது இறப்பு குறித்து மற்றொரு கருத்து நிலவி வருகிறது அது ஹர்பஜன் சிங் ஒரு பனிப்பாறையில் மூழ்கி இறந்துள்ளார் என்பதாகும். மற்றும் அவர் குறித்து நம்பப்படும் கதைகள் தொலைதூர புறக்காவல் நிலையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் கழுதைகளின் நெடுவரிசையை வழிநடத்தினார். மூன்று நாள் தேடலுக்குப் பிறகு அவரது அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் அவரது உடல் முழு இராணுவ மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது. மறைந்த சிங் அவரது உடலைக் கண்டுபிடிக்க தேடல் குழுக்களுக்கு உதவியதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே போர் ஏற்பட்டால் பாபா அவர்களின் ஆன்மா இந்திய இராணுவ வீரர்களுக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாக வரவிருக்கும் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் என்று பல இந்திய வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். நாதூ லாவில் இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை கூட்டங்களின் போது, ​​சீனர்கள் அவரை கௌரவிப்பதற்காக ஒரு நாற்காலியை ஒதுக்கி வைத்தனர்.

இராணுவ வீரர்களிடையே நிலவும் பொதுவான நம்பிக்கை எந்தவொரு இராணுவ அதிகாரியும் சுத்தமான மற்றும் ஒழுக்கமான உடையை பராமரிக்காதது பாபாவால் அறைந்து தண்டிக்கப்படும் என்பதாகும். காட்சியில் தொங்கும் அவரது சொந்த உடையை யாரும் சுத்தம் செய்ய வேண்டியதில்லை, ஏனெனில் அது அவரது ஆத்மாவால் சுத்தம் செய்யப்படுகிறது என அனைவராலும் நம்பப்படுகிறது.

மரபுகள்

தொகு
 
பாபா ஹர்பஜன் சிங் ஆலயம்

இவர் புனிதர் அல்லது கடவுள் நிலை பெற்றவர் என அனைவராலும் அறியப்படுகிறார்.[5] ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி ஒரு பொறி வண்டி அவரது தனிப்பட்ட பொருட்களுடன் அருகிலுள்ள இரயில் நிலையமான புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம் செல்ல புறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அவரது உடைமைகளை இந்திய மாநிலமான பஞ்சாப் மாநிலத்தின் கபூர்தலா மாவட்டத்தில் உள்ள குகா கிராமத்திற்கு ரயிலில் அனுப்பப்படுகிறது. இந்திய இரயில்வேயின் எந்தவொரு ரயிலிலும் வெற்று படுக்கை வசதியில் பாபாவுக்கு ஒரு சிறப்பு முன்பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவரது சொந்த ஊருக்கு பயணம் செய்ய ஒரு இருக்கை காலியாக விடப்படுகிறது, மேலும் மூன்று வீரர்கள் பாபாவின் உடைமைவுடன் அவரது வீட்டிற்கு செல்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் நாதூ லாவில் இருந்து இராணுவ வீரர்களால் ஒரு சிறிய தொகை அவரது தாய்க்கு அனுப்பப்படுகிறது. மேலும் அவரது கிராமம் அவரை இன்னும் தியாகியாக நினைவில் வைத்துக் கொள்கிறது மற்றும் அவரது குடும்பத்திற்கு உதவுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.[6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Baba Harbhajan temple Sikkim History In Hindi: बाबा जशवंत सिंह मंदिर - सिक्किम - इस मृत सैनिक की आत्मा आज भी करती है देश की रक्षा". ajabgjab.com. 2 June 2014. பார்க்கப்பட்ட நாள் 15 January 2017.
  2. https://www.honourpoint.in/profile/sepoy-baba-harbhajan-singh/
  3. "The Hero Of Nathula Pass – Spirit Of Baba Harbhajan Singh That Guards India’s Border" (in en). indiatimes.com. http://www.indiatimes.com/culture/who-we-are/the-hero-of-nathula-pass-ghost-of-baba-harbhajan-singh-that-guards-India-s-border-247635.html. 
  4. http://gallantryawards.gov.in/awardees/maha-vir-chakra
  5. "Baba Harbhajan Singh: A Dead Soldier still on duty". youtube.com. 4 July 2015. பார்க்கப்பட்ட நாள் 15 January 2017.
  6. "The soul sentinel". http://indiatoay.intoday.in/story/capt-harbhajan-singh-guards-indo-china-border-after-death/1/190508.html. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Harbhajan Singh of Upper Sikkim" இம் மூலத்தில் இருந்து 7 August 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060807010626/http://www.himalmag.com/2002/march/travel.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்டன்_ஹர்பஜன்_சிங்&oldid=3462166" இலிருந்து மீள்விக்கப்பட்டது