கேரளா மக்கள் கலை மன்றம்
கேரள மக்கள் கலை மன்றம் ( Kerala People's Arts Club ) ( கே. பி. ஏ. சி. எனவும் அறியப்படுகிறது ) என்பது இந்தியாவின் கேரளாவின் காயம்குளத்திலுள்ள ஒரு நாடக இயக்கமாகும். இது 1950களில் கேரளாவில் உள்ள இந்தியப் பொதுவுடைமைக் கட்சி நெருங்கிய உறவுகளைக் கொண்ட ஒரு குழுவினரால் உருவாக்கப்பட்டது. கேரளாவில் பொதுவுடைமை இயக்கத்தை பிரபலப்படுத்துவதில் கேரள மக்கள் கலை மன்றம் மிகவும் செல்வாக்கு செலுத்தியது.
சுருக்கம் | கே. பி. ஏ. சி. |
---|---|
உருவாக்கம் | 1950 |
நிறுவனர் | காம்பிசேரி கருணாகரன் |
தலைமையகம் |
|
சேவைப் பகுதி | கேரளம் |
துறை | நாடகம், திரைப்படம் |
தலைவர் | கனம் ராஜேந்திரன் |
செயலாளர் | ஏ. ஷாஜகான் |
சார்புகள் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
1951 ஆம் ஆண்டில், கேரள மக்கள் கலை மன்றம் என்டே மகனானு ஷெரி (என் மகன் சரியானவன்) என்றா தனது முதல் நாடகத்தை அரங்கேற்றியது. இந்த நாடகத்தின் பாடல்களை புனலூர் பாலன் என்பவர் எழுதியுள்ளார். அதன் இரண்டாவது நாடகமான நிங்கலென் கம்யூனிஸ்டக்கி 1952 ஆம் ஆண்டில் முதன்முதலில் நிகழ்த்தப்பட்டது. இது மலையாள நாடக வரலாற்றில் பழைய பாதையை உடைக்கும் நாடகமாக மாறியது. இந்த நாடகத்தை புகழ்பெற்ற நாடக ஆசிரியர் தோப்பில் பாசி சோமன் என்ற புனைப்பெயரில் எழுதினார். பாசி இந்த நாடகத்தை எழுதும்போது தலைமறைவாக இருந்து எழுதினார். நாடகத்தின் வெற்றி மூலம் கேரளாவில் ஒரு சக்திவாய்ந்த மக்கள் நாடக இயக்கத்தில் கேரள மக்கள் கலை மன்றம் முன்னணியில் இருந்தது.[1]
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அதன் நாடகங்கள், சாலை நிகழ்ச்சிகள் மற்றும் கதைப்பிரசங்கங்கள் மூலம் பிரபலப்படுத்துவதில் கேரள மக்கள் கலை மன்றம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Frontline article". Archived from the original on 30 December 2001. பார்க்கப்பட்ட நாள் 14 November 2008.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "First Ministry of Kerala Government". Archived from the original on 2 October 2008. பார்க்கப்பட்ட நாள் 14 November 2008.