கேர் அல்லது கெயார் (CARE) (எவ்விடத்து உய்வுக்கும் உதவிக்குமான கூட்டுறவு என்பதன் ஆங்கிலச் சுருக்கம், Cooperative for Assistance and Relief Everywhere) நெருக்கடிநிலை துயர்நீக்க உதவியையும் நீண்டகால பன்னாட்டு வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுக்கும் முதன்மையான பன்னாட்டு மாந்தநேயமிக்க முகமை ஆகும். 1945ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் எவ்விதக் குழு சார்பற்ற, பக்கச் சார்பற்ற, அரசு சார்பற்ற அமைப்பாக இயங்கு வருகின்றது. உலகளாவிய வறுமைக்கு எதிரான மிகப்பெரிய, மிகப்பழைய மாந்தநேயமிக்க அமைப்புகளில் ஒன்றாக இது விளங்குகின்றது.[1] 2014இல் 90 நாடுகளில், 880 வறுமை-எதிர்ப்பு திட்டங்களிலும் மாந்தநேயமிக்க உதவித் திட்டங்களிலும் செயலாற்றி 72 மில்லியன் மக்களுக்கு உதவி வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.[2]

கெயார் / கேர்
(எவ்விடத்து உய்வுக்கும் உதவிக்குமான கூட்டுறவு)
உருவாக்கம்1945
நிறுவனர்வேல்லஸ் ஜஸ்டின் சம்பெல்
வகைபன்னாட்டு மாந்தநேயமிக்க முகமை
துறைகள்பேரிடர் நிவாரணம் மற்றும் வளர்முக உதவி
பொது செயலாளர்
உல்ஃப்கேங் ஜாமண்
தலைமைச் செயலர்
அபி மேக்சுமேன்
ஆளுகை
ரால்ஃப் மார்டென்சு
செயல்நோக்கம்உயிர்களைக் காக்கவும், வறுமையை ஒழிக்கவும், சமூக நீதியை அடைவும் உலகெங்கும் செயற்படுதல்.
Work around the globe to save lives, defeat poverty and achieve social justice.
வலைத்தளம்http://www.care-international.org/
imitate the logo of CARE International

வளரும் நாடுகளில் கேரின் பங்காற்றல் நெருக்கடிநிலை எதிர்வினை, உணவு உறுதியாக்கம், நீரும் சுகாதாரமும், பொருளாதார வளர்ச்சி, காலநிலை மாற்றம், வேளாண்மை, கல்வி, மற்றும் உடல்நலம் ஆகிய துறைகளில் உள்ளது. கொள்கை வடிவாக்கலிலும் வறியவர்களின் உரிமைகளுக்காகவும் உள்ளூர், தேசிய மற்றும் பன்னாட்டளவுகளில் கெயார் பரிந்துரைகள் வழங்குகின்றது. இந்த முயற்சிகளின்போது பெண்களின் தேவைகளை எடுத்துரைக்கவும் பாலினச் சமனிலையை வற்புறுத்தவும் கெயார் குவியம் கொண்டுள்ளது.[2]

கெயார் பன்னாடு நிறுவனம் பதினான்கு கெயார் தேசிய உறுப்பினர்களின் கூட்டமைப்பாகும். ஒவ்வொரு கெயார் தேசிய அமைப்பும் அவர்களது நாட்டில் தன்னாட்சி பெற்ற இலாப நோக்கற்ற அரசு சார்பற்ற அமைப்பாக உள்ளது. இந்த பதினான்கு கெயார் தேசிய அமைப்புகள்: கெயார் ஆத்திரேலியா, கெயார் கனடா, கெயார் டென்மார்க், கெயார் டச்சுலாந்து-லக்சம்போர்கு, கெயார் பிரான்சு, கெயார் இந்தியா, கெயார் பன்னாடு சப்பான், கெயார் நெதர்லாந்து, கெயார் நோர்ஜ், கெயார் உசுத்ரைசு, ரேக்சு தாய் நிறுவனம் (கெயார் தாய்லாந்து), கெயார் பன்னாடு யுகே, கெயார் யுஎஸ்ஏ, மற்றும் கெயார் பெரு. பொதுவாக வளரும் நாடுகளில் அந்நாட்டில் உள்ள கெயார் அலுவலகம் மூலம் தனது திட்டங்களை மேலாண்மை செய்யும்; முழுமையாக தங்கள் அலுவலகங்கள் இல்லாத சில நாடுகளிலும் பேரிடர் காலங்களில் கெயார் திட்டங்களை மேற்கொள்ளலாம்.[2]

கட்டமைப்பு

தொகு

கெயார் பன்னாடு நிறுவனம் பதினான்கு கெயார் தேசிய உறுப்பினர்களின் கூட்டமைப்பாகும்; கெயார் பன்னாடு தலைமைச் செயலகம் இதனை ஒருங்கிணைக்கின்றது. இந்த தலைமைச் செயலகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவையுடனும் ஐரோப்பிய நிறுவனங்களுடனும் திட்டங்களை ஒருங்கிணைக்க நியூ யார்க்கிலும் பிரசெல்சிலும் கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளது.[3]

ஒவ்வொரு கெயார் தேசிய உறுப்பினரும் அவரவர் நாட்டில் தன்னாட்சியான அரசு சார்பற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்டவை; இவை திட்டங்களை நடத்தவும், நிதி உதவி ஏற்கவும், பொதுத் தொடர்புக்கும் தன்னாட்சி கொண்டவை. தற்போது பதினான்கு தேசிய உறுப்பினர்களைக் கொண்டுள்ளது; இந்த பதினான்கு கெயார் தேசிய அமைப்புகள்:[3]

கெயார் தேசிய மற்றும் இணை உறுப்பினர்கள்
கெயார் உறுப்பினர் இணைந்தது: வலைத்தளம்
கெயார் ஆத்திரேலியா 1987[4] www.care.org.au
கெயார் கனடா 1946[5] www.care.ca
கெயார் டென்மார்க் 1987[6] www.care.dk
கெயார் டச்சுலாந்து-லக்சம்பர்கு 1981[5] www.care.de
கெயார் பிரான்சு 1983[7] www.carefrance.org
கெயார் இந்தியா 2011 [8] www.careindia.org
கெயார் பன்னாடு சப்பான் 1987[9] www.careintjp.org
கெயார் நெதர்லாந்து 2001[10] www.carenederland.org
கெயார் நோர்ஜ் 1980[11] www.care.no
கெயார் உசுத்ரைசு 1986[12] www.care.at
கெயார் பெரு 2012[2] www.care.org.pe
ரக்சு தாய் நிறுவனம் (கெயார் தாய்லாந்து) 2003[13] www.raksthai.org
கெயார் பன்னாடு யுகே 1985[14] www.careinternational.org.uk
கெயார் யுஎஸ்ஏ (நிறுவன உறுப்பினர்: துவக்கத்தில் கெயார்) 1945[5] www.care.org

மேற்சான்றுகள்

தொகு
  1. "CARE's Structure and Governance" (PDF). பார்க்கப்பட்ட நாள் 19 February 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 "Annual Report 2013" (PDF). Archived from the original (PDF) on 2015-02-19. பார்க்கப்பட்ட நாள் 2016-01-29.
  3. 3.0 3.1 "Global Network". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2016-01-29.
  4. "CARE Australia History". பார்க்கப்பட்ட நாள் 19 February 2015.
  5. 5.0 5.1 5.2 O’Keefe L, Drew J, Bailey L, Ford M. (1991). "Guide to the Records of CARE" (PDF). New York Public Library.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  6. "CARE's History | Who is care? | CARE International Japan". Careintjp.org. பார்க்கப்பட்ட நாள் 2014-06-11.
  7. "ONG CARE France | Association de solidarité internationale". Carefrance.org. 2013-09-02. Archived from the original on 2013-01-25. பார்க்கப்பட்ட நாள் 2014-06-11.
  8. "CARE India".
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-08. பார்க்கப்பட்ட நாள் 2016-01-29.
  10. "CARE Netherlands".
  11. "CARE – CAREs historie". Care.no. Archived from the original on 2014-07-01. பார்க்கப்பட்ட நாள் 2014-06-11.
  12. "CARE in Österreich". Care.at. பார்க்கப்பட்ட நாள் 2014-06-11.
  13. "Thailand". CARE. பார்க்கப்பட்ட நாள் 2014-06-11.
  14. "Our history | CARE International United Kingdom | One of the world's leading poverty charities | CARE International United King". Careinternational.org.uk. 1946-05-11. Archived from the original on 2015-03-30. பார்க்கப்பட்ட நாள் 2014-06-11.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேர்&oldid=3582922" இலிருந்து மீள்விக்கப்பட்டது