கே. கிருஷ்ணன்குட்டி
கே. கிருஷ்ணன்குட்டி (K. Krishnankutty) (பிறப்பு 13 ஆகத்து 1944) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் கேரள அரசின் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சரும் ஆவார். [1][2] இவர் கேரள அரசின் சிற்றூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் [3] முன்னாள் கேரள நீர்வளத்துறை அமைச்சரும் ஆவார். இவர் தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசில் தொடங்கினார். 1969 ஆம் ஆண்டில் கேபிசிசி உறுப்பினராக ஜனதா தளத்தில் இணையும் வரை தொடர்ந்தார்.[4] இவர் கேரளா கூட்டுறவு இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார்.[5] இவர் இதற்கு முன்பு பெருமாட்டி சேவை கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், பாலக்காடு மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் கேரள மாநில கூட்டுறவு வங்கியின் இயக்குனராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.[4]இவர் கேரள சட்டமன்றத்தின் உறுப்பினராக 6 ஆம், 7 ஆம், 9 ஆம் மற்றும் 14 ஆம் அவைகளின் உறுப்பினர் ஆவார்.[4] இவர் பிணறாயி விஜயனின் அமைச்சரவையில், திருவல்லா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மேத்யூ டி. தாமசிற்குப் பிறகு அமைச்சரானார்.[6]
கே. கிருஷ்ணன்குட்டி | |
---|---|
மின்சாரத்துறை அமைச்சர், மரபுசாரா ஆற்றல் கிராமப்புறத் தொழில்நுட்பம், கேரள அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 மே 2021 | |
முன்னையவர் | எம். எம். மணி |
Member of the கேரள சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 சூன் 2016 | |
முன்னையவர் | கே. அச்சுதன் |
தொகுதி | சிற்றூர் சட்டமன்றத் தொகுதி |
பிணறாயி விஜயனின் இரண்டாவது அமைச்சரவை, கேரள அரசு | |
பதவியில் 26 நவம்பர் 2018 – 3 மே 2021 | |
முன்னையவர் | பி. ஜே. ஜோசப் |
பின்னவர் | ரோச்சி அகசுடின் |
சட்டமன்ற உறுப்பினர், கேரள சட்டமன்றம் | |
பதவியில் 1991 –1996 | |
முன்னையவர் | கே. ஏ. சந்திரன் |
பின்னவர் | கே. அச்சுதன் |
தொகுதி | சிற்றூர் |
பதவியில் 1980 –1987 | |
முன்னையவர் | பி. சங்கர் |
பின்னவர் | கே. ஏ. சந்திரன் |
தொகுதி | சிற்றூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 ஆகத்து 1944 பெருமாட்டி, மலபார் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய பாலக்காடு மாவட்டம், கேரளம், இந்தியா) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) |
துணைவர் | கே. விலாசினி |
வாழிடம்(s) | பெரியாறு, கிளிப் வீடு வளாகம், நாந்தென்கோடு, திருவனந்தபுரம், கேரளம் |
இவர் கேரளாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவராக இருந்தார்.[7]
இவர் குஞ்சுகுட்டி மற்றும் ஜானகி ஆகியோருக்கு பெருமாட்டியில் உள்ள எழுத்தாணியில் 1944 ஆம் ஆண்டு ஆகத்து 13 ஆம் நாள் பிறந்தார்.[8] இவர் தட்டாமங்கலத்தில் அரசு எஸ். எம். உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பினை முடித்தார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 21 May 2021. பார்க்கப்பட்ட நாள் 21 May 2021.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Notifications - Government of Kerala, India". kerala.gov.in. Archived from the original on 2021-05-17. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
- ↑ "Kerala Assembly Election 2016 Results". கேரள சட்டமன்றம். பார்க்கப்பட்ட நாள் 8 June 2016.
- ↑ 4.0 4.1 4.2 "Members - Kerala Legislature". www.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-08.
- ↑ "K Krishnankutty sworn in as new Kerala Minister for Water Resources". www.thenewsminute.com. 28 November 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-05-08.
- ↑ "K Krishnankutty: From a true son of soil to top echelons of power". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-05-08.
- ↑ "Kerala: LDF constituent JD(S) changes minister, K Krishnankutty takes charge of Water Resources Ministry". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-11-27. பார்க்கப்பட்ட நாள் 2020-05-08.
- ↑ 8.0 8.1 "K Krishnankutty(Independent(IND)):Constituency- CHITTUR(PALAKKAD) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-05-08.