கே. டி. எம் அகமது இப்ராகிம் சாகிப்


கே. டி. எம் அகமது இப்ராகிம் சாகிப் (K. T. M. Ahmed Ibrahim பிறப்பு 15 ஜூன் 1897) ஒரு இந்திய அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார்.[1][2][3][4] இவர் 1947 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி முதல் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி வரை இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தார். இவர் அகில இந்திய முஸ்லீம் லீக்கின் தலைவராகவும் பணியாற்றினார்.[1]

கே. டி. எம் அகமது இப்ராகிம்
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினர்
பதவியில்
14 ஜூலை 1947 – 24 ஜனவரி 1950
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபேட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு
அரசியல் கட்சிஇந்திய முஸ்லிம் லீக்
உறவுகள்காயிதேமில்லத் முகம்மது இசுமாயில் சாகிப் (சகோதரர்)
முன்னாள் கல்லூரிசி. எம் கல்லூரி, இந்து கல்லூரி, திருவனந்தபுரம்

பிறப்பு

தொகு

திருநெல்வேலி மாவட்டம்,பேட்டையில் மௌலவி மியாகான் இராவுத்தரின் மூன்றாவது மகனாக பிறந்தார், இரண்டாவது மகன் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி

தொகு

இவர் தமிழ், சமஸ்கிருதம், அரபு மற்றும் உருது ஆகிய மொழிகளில் தேர்ந்தவராக இருந்தார்.

திருநெல்வேலியில் உள்ள சி.எம். கல்லூரி, திருவனந்தபுரம் இந்துக் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரி, மற்றும் அரசு சட்டக் கல்லூரி, சென்னை ஆகியவற்றில் கல்வி கற்றார்; 1919 இல் பி.ஏ தேர்ச்சி பெற்றார். 1921 இல் பி.எல். படித்தார் .[5][6]

இயக்கம்

தொகு

இவர் 1921 இல் பட்ட மாணவராக இருக்கும்போதே தீவிர அரசியலில் நுழைந்தார்; அவரது சகோதரர் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் உடன் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். 1920 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற 26 வது மாகாண அரசியல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற காரணமாயிருந்தார். அதன் காரணமாக பிஎல் பட்டம் பெறவும், மாகண சபைக்கான‌ தேர்தலில் நிற்கவும் மறுத்தார்.

பதவிகள்

தொகு
  • சைபுல் இஸ்லாம் தமிழ் நாளிதழின் இணை ஆசிரியராகவும்,
  • 1924-26 முஸ்லீம் பப்ளிஷிங் ஹவுஸ் லிமிடெட் தொடங்கப்பட்டு அதன் மூலம் வெளிவந்த முஸ்லீம் தமிழ் நாளிதழின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார்.
  • 1928 முதல் மெட்ராஸ் பிரசிடென்சி முஸ்லீம் லீக்கின் செயலாளர் மற்றும் அதன் பார்லிமெண்டரி போர்டு உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பணிக்குழு உறுப்பினர்,
  • மூன்று முறை மதராஸ் பாட புத்தக கழக உறுப்பினர்,
  • ஆறு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் செனட் குழு உறுப்பினர் மற்றும் அகாடமிக் கவுன்சில் உறுப்பினர்
  • இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினர்,
  • திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • முஸ்லிம் அனாதை இல்லம், தென்னிந்திய முஸ்லீம் கல்வி சங்கம் போன்ற அமைப்புகள் மூலம் பொதுச் சேவைகளில் ஈடுபட்டார்.
  • மெட்ராஸ் தெற்கு முகமதன் தொகுதியில் இருந்து மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்;

இதையும் பார்க்க

தொகு


மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Wright, Theodore P. (September 1966). "The Muslim League in South India since Independence: A Study in Minority Group Political Strategies" (in en). American Political Science Review 60 (3): 579–599. doi:10.2307/1952972. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-0554. https://www.cambridge.org/core/journals/american-political-science-review/article/abs/muslim-league-in-south-india-since-independence-a-study-in-minority-group-political-strategies/2EBA3F25D373A0D9BA1DBAA6B9D25C30. 
  2. "Constitution of India". www.constitutionofindia.net. Archived from the original on 2023-01-26. பார்க்கப்பட்ட நாள் 2023-01-26.
  3. "Eparlib". Constituent Assembly Debates. https://eparlib.nic.in/bitstream/123456789/762982/1/cad_28-08-1947.pdf. 
  4. "Freedom First Magazine | The monthly journal of the Indian Committee for Cultural Freedom". www.freedomfirst.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-26.
  5. "Constituent Assembly of India: Debates". loksabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-26.
  6. "Debates in the Constituent Assembly and thereafter on UniformCivil Code". Indian Policy Foundation. 13 November 2020. https://www.ipf.org.in/encyc/2020/11/13/2_02_30_42_Debates-in-the-Constituent-Assembly-and-thereafter-on-Uniform-Civil-Code-Papers_1.pdf.