கே. ரமணி
கே. ரமணி (16 சூலை 1916, இடப்பல், பாலக்காடு மாவட்டம் - 30 மே 2006, கோயம்புத்தூர் ) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1969 ஆம் ஆண்டு இந்திய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கபட்டார். மேலும் இவர் நான்குமுறை தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், இந்திய தொழிற்சங்கங்க மையத்தின் தமிழக மாநிலக் குழுத் தலைவராக இருந்தார். [1]
இவர் கேரளத்தில் பிறந்த இவரது குடும்பம் ரமணிக்கு 14 வயது இருக்கும்போது கோவைக்கு இடம்பெயர்ந்தது. இளம் வயதில், ரமணி ஒரு உணவகத்தில் வேலை செய்தார். ரமணி அரசியல் உணர்வுபெற்று, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1939 ஆம் ஆண்டில் இவர் பல தொண்டர்களுடன் அக்கட்சியிலிருந்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார். மேலும் இவர் தொழிற்சங்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். இக்காலக்கட்டதில் இவர் இரண்டு முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். [1]
1948 இல் பொதுவுடைமைக் கட்சி தடை செய்யப்பட்டபோது, ரமணி தலைமறைவு ஆனார். இரண்டு ஆண்டு தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு, இவர் காவல் துறையினரிடம் பிடிபட்டார். இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1951 இல் பொதுவுடமைக் கட்சி சட்டப்பூர்வமான கட்சியாக ஆனபோது, ரமணி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். [1]
1959 இல் பொதுஉடமைக் கட்சியின் தேசியக் குழுவுக்கு ரமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964 கட்சியில் பிளவுற்றபோது இந்திய மாக்சிய பொதுவுடமைக் கட்சியுடன் இணைந்த 32 தேசியக் குழு உறுப்பினர்களில் ரமணியும் ஒருவர். கட்சி துவக்கபட்ட உடனேயே, இவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். 16 மாத சிறைவாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். [1]
1967 ஆம் ஆண்டில், கோயம்புத்தூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு (நாடாளுமன்றத்தின் கீழவை) தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] அத் தேர்தலில் ரமணி 240.856 வாக்குகள் (57.93%) பெற்று காங்கிரஸ் வேட்பாளரான தொழிலதிபர நா. மகாலிங்கத்தைத் தோற்கடித்தார். [2][3]
நெருக்கடி நிலை 1975-1977 காலத்தில், ரமணி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். [1]
ரமணி 1977–1991 காலகட்டத்தில் தமிழ்நாடு சட்டசமன்றத்துக்கு கோவையில் கிழக்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டார். [4] பிப்ரவரி 1, 1989 அன்று, இவர் சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.[5]
மேற்கோள்கள்
தொகு
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Comrade K Ramani: Sacrifice Personified". People's Democracy (இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)). 11 July 2006 இம் மூலத்தில் இருந்து 10 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090410124129/http://pd.cpim.org/2006/0611/06112006_com%20k%20ramani.htm.
- ↑ இந்தியத் தேர்தல் ஆணையம்: Statistical Report on the General Elections, 1967, to the Fourth Lok Sabha பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ K.V. Prasad (21 February 2004). "CPI, BJP set for another clash". தி இந்து இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041121213414/http://www.hindu.com/2004/02/21/stories/2004022112560300.htm.
- ↑ இந்தியத் தேர்தல் ஆணையம்: Partywise Comparison Since 1977, 106 – Coimbatore East Assembly Constituency பரணிடப்பட்டது 29 திசம்பர் 2004 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "CPI(M) veteran leader Ramani passes away". தி இந்து. 31 May 2006 இம் மூலத்தில் இருந்து 5 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071205204848/http://www.hindu.com/2006/05/31/stories/2006053121940300.htm.