கொக்கிளாய் சரணாலயம்

கொக்கிளாய் சரணாலயம் வடகிழக்கு இலங்கையின் முல்லைத்தீவிலிருந்து சுமார் 25 கிலோ மீற்றர் (16 மைல்) தென் கிழக்கில் அமைந்துள்ளது.

கொக்கிளாய் சரணாலயம்
Kokkilai sanctuary
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Map showing the location of கொக்கிளாய் சரணாலயம்
Map showing the location of கொக்கிளாய் சரணாலயம்
Kokkilai Sanctuary
இலங்கையின் வட மாகாணம்
அமைவிடம்வட மாகாணம் இலங்கை
அருகாமை நகரம்முல்லைத்தீவு
ஆள்கூறுகள்09°01′25″N 80°55′55″E / 9.02361°N 80.93194°E / 9.02361; 80.93194
பரப்பளவு20 km2 (8 sq mi)
நிருவாகிஇலங்கை அரசு

வரலாறு

தொகு

கொக்கிளாய் குளம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் பறவைகள் சரணாலயமாக 18 மே 1951 இல் இருந்து 1937 ஆம் ஆண்டின் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.[1][2] 1990 ஆம் ஆண்டு இச் சரணாலயம் 2,995 ஹெக்டேயர் (7,440 ஏக்கர்) பரப்பளவை கொண்டிருந்தது.[1] தற்போது  1,995 ஹெக்டெயர் (4930 ஏக்கர்) பரப்பளவை கொண்டுள்ளது.[2]

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவை அடுத்து, வடக்கு மாகாணத்தில் கொக்கிளாய் சரணாலயம் உட்பட பல சரணாலயங்களை தேசிய பூங்காக்களாக மாற்றும் திட்டங்களை அரசாங்கம் அறிவித்தது.[3][4] வட மாகாணத்தில் 2015 ஆம் ஆண்டு சூன் 22 ஆம் திகதி புதிய நான்கு தேசிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் கொக்கிளாய் மட்டுமே சரணாலயம் ஆகும்.[5][6]

யுனைடட் நேஷன்ஸ் டெவலப்மன்ட் புரோகிராம் மற்றும் சுற்று சூழல் திட்டம் ஆகியவற்றின் உதவியுடன் 2014 ஆம் ஆண்டு வடமாகாணத்தின் ஒருங்கிணைந்த மூலோபாய சுற்று சூழல் மதிப்பீடு கொக்கிளாய் சரணாலயம் நெய்யரு குளத்தினை உள்ளடக்கியதாக நீட்டிக்கப்பட வேண்டுமென பரிந்துரைத்தது.[7]

கொக்கிளாய் சரணாலயம் சட்ட விரோத காடழிப்புக்கு உட்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் ஏறக்குறைய 1000 ஏக்கர் மற்றும் 3000 பறவைகள் அழிக்கப்பட்டன.

தாவரங்கள் மற்றும் விலங்குகள்

தொகு

கொக்கிளாய் குளம் பகுதியாக சதுப்பு நிலங்களாலும், புல் படுக்கைகளாலும் சூழப்பட்டுள்ளது.[1] இதனை சுற்றியுள்ள பகுதி பயிரிடப்பட்ட நிலம், புதர் மற்றும் திறந்த காடுகளை கொண்டது.[1] பல்வேறு வகையான பறவைகள் இச் சரணாலயத்தில் காணப்படுகின்றன. இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் பறவைகளின் புகலிடம் கொக்கிளாய் சரணாலயம் ஆகும்.[8] இச் சரணாலயத்தில் யானைகளும் காணப்படுகின்றன.[9][10]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 https://archive.org/details/iucndirectoryofs90gree
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-30.
  3. http://www.thesundayleader.lk/2010/06/01/new-wildlife-parks-in-the-north/ பரணிடப்பட்டது 2016-01-28 at the வந்தவழி இயந்திரம்en:The Sunday Leader
  4. https://web.archive.org/web/20160126040611/http://www.ceylontoday.lk/51-69133-news-detail-elephant-experts-predict-miserable-failure.html
  5. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jun/1920_03/1920_03%20E.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  6. http://www.sundaytimes.lk/150510/news/wild-north-gets-govts-helping-hand-at-last-148433.html
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-01-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-30.
  8. http://www.sundaytimes.lk/100509/Plus/plus_10.html
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-03-30.
  10. http://archives.dailynews.lk/2010/05/12/news35.asp
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கிளாய்_சரணாலயம்&oldid=3551500" இலிருந்து மீள்விக்கப்பட்டது