கொக்கிளாய் தாக்குதல்
கொக்கிளாய் தாக்குதல் (Kokkilai offensive) என்பது 1985 பெப்ரவரி 13 ஆம் நாள் இரவு இலங்கையின், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்கிளாய் என்ற இடத்தில் உள்ள இலங்கை இராணுவ முகாமின் மீது விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலாகும். ஈழப் போரின் ஆரம்பக் கட்டத்தில் தமிழ் போராளிக் குழுவொன்று இலங்கை இராணுவத் தளத்தின் மீது நடத்திய முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும்.[1]
கொக்கிளாய் தாக்குதல் | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஈழப் போர், முதலாம் ஈழப்போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இலங்கை | தமிழீழ விடுதலைப் புலிகள் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
லெப்டினன்ட் சாந்த விஜேசிங்க | வேலுப்பிள்ளை பிரபாகரன் | ||||||
பலம் | |||||||
தெரியவில்லை | 100 | ||||||
இழப்புகள் | |||||||
4 பேர் கொல்லப்பட்டனர் | 16 பேர் கொல்லப்பட்டனர் |
முகாம் லெப்டினன்ட் சாந்த விஜேசிங்கவின் தலைமையில் இயங்கிய கொக்கிளாய் இராணுவ முகாமானது 1985 பெப்ரவரி 13 ஆம் நாள் இரவு பெரும் போராளிகள் குழுவால் தாக்குதலுக்கு உள்ளானது. போராளிகள் அப்போதுதான் முதன்முதலில் எறிகணையினால் உந்தப்படும் கைக்குண்டுகளைப் பயன்படுத்தினர். இராணுவ முகாமுக்கு காலையில் துணைப்படைகளின் உதவி கிடைத்தது. 14 போராளிகளின் உடல்கள் முகாமைச் சுற்றி வெளியே இராணுவ வகை சீருடை அணிந்தும், இரவு பார்வை கண்ணாடிகளுடன் கண்டெடுக்கப்பட்டன. கொக்கிளாய் தாக்குதல் என்பது முழு அளவிலான ஆயுத மோதல் என்றும், விடுதலைப் புலிகள் 'அதிநவீனமான எதிரியாக மாறி' வருவதாகவும் அன்றைய இலங்கை சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரவி ஜெயவர்த்தன தேசிய பாதுகாப்புச் அவைக்கு அறிக்கை அளித்தார். இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினராக ரஞ்சன் கனகரட்ணம்[2] இறந்தார் என்று நம்பப்படுகிறது. இலங்கை இராணுவத்தின் லெப்டினன்ட் சாந்த விஜேசிங்க, பதவி உயர்வு பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sara de Silva. "An examination of the lifecycle of liberation of Tigers of Tamil Eelam". University of Wollongong. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021.
- ↑ "The Eastern warlord". 2004-04-09.