கொடிமூட்டில் பத்ரகாளி கோயில்

கொடிமூட்டில் பத்ரகாளி கோயில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் பாரிப்பள்ளியில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயிலின் மூலவர் பத்ரகாளி ஆவார்.

துணைத்தெய்வங்கள்

தொகு

இங்கு தேவி, சிவன், கணபதி, நவக்கிரகங்கள் ஆகிய துணைத்தெய்வங்கள் உள்ளன.

விழாக்கள்

தொகு

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பொங்கலுடன் தொடங்கி பத்து நாட்கள் விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதில் கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பெண்கள் கலந்து கொள்கின்றனர். [1] [2] பத்தாம் நாள் நடைபெறும் அனைவரையும் ஈர்க்கின்ற கஜமேளா எனப்படும் யானை ஊர்வலம் நடைபெறுகிறது. [3]

சிறப்பு

தொகு

இக்கோயில் ஈழவா (செகவர்) சமூகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது, இருப்பினும் அனைத்து சாதியினரும் இனபேதமின்றி இக்கோயிலில் நடைபெறும் விழாவில் பங்கேற்கின்றனர். இங்கு நவராத்திரி விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Hundreds offer Pongala". http://www.hindu.com/2008/03/01/stories/2008030151320300.htm. 
  2. "Temple fete from March 2". http://www.hindu.com/2007/02/27/stories/2007022709490300.htm. 
  3. "Parippally Gajamela". பார்க்கப்பட்ட நாள் 20 February 2011.

வெளி இணைப்புகள்

தொகு