கொய் (Galathea gizzard shad, Nematalosa galatheae) என்னும் மீனினம் சவர் நீர்நிலைகளிலேயே கூடுதலாக வாழ்கிறது.

தோற்றம்Edit

இம்மீன்கள் 16.3 செ.மீ வரை கண்டறியப்பட்டுள்ளன.

சூழியல்Edit

இம்மீன்கள் பெரும்பாலும் கடல்களில் வாழ்ந்து வந்தாலும், இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் மட்டும் நன்னீர் ஆறுகளுக்குச் செல்லும் பண்புடையன.

பரம்பல்Edit

இவை இந்தியாவின் தென்மேற்குக் கடற்கரை, வங்காள விரிகுடா, அந்தமான் கடல், தாய்லாந்து, இலங்கை சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளின் கடற்கரை முதலிய இடங்களில் காணப்படுகின்றன.

இலக்கியத்தில் கொய்Edit

பொய்க் கெண்டை என்று அழைக்கப்படும் கொய் மீன் பற்றிய குறிப்பொன்று அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது.

"கை அனைத்தும் கலந்து எழுகாவிரி

செய் அனைத்திலும் சென்றிடும், செம்புனல்
கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா

ஐயனைத்தொழுவார்க்கு அல்லல் இல்லையே" (188-3)

என்று ஐந்தாம் திருமுறையில் குறிப்பிடும் அப்பர் அடிகள் காவிரியின் வெள்ள நீரில் இம்மீன் மிகுந்த அளவில் வந்ததாக, மயிலாடுதுறை வட்டம், பழவாற்றின் கரையிலுள்ள திருக்குரக்காவல் எனும் ஊர்ப் பதிகத்தில் பாடியுள்ளார்[2].

மேற்கோள்கள்Edit

  1. "Nematalosa galatheae (Galathea Gizzard Shad)". பார்த்த நாள் 2010-12-31.
  2. வேதிமம் அழித்த வயல் மீன் வளம், தமிழ்க்கூடல், முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், 3 மார்ச், 2005