கொளுக்குமலை
கொளுக்குமலை, தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சியில் அமைந்துள்ள மலைக்கிராமம் ஆகும். இது போடிக்கு வடமேற்கே 50 கிலோ மீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குரங்கணி அருகே அமைந்துள்ளது எனிலும் நேரடி சாலை வசதி இல்லை. மூணார் அல்லது சூரியநெல்லி வழியாக கொளுக்குமலைக்கு சாலை வசதி உள்ளது.[1]
கொளுக்குமலை | |
---|---|
மலைக்கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°04′30″N 77°13′16″E / 10.075°N 77.221°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தேனி |
அரசு | |
• நிர்வாகம் | கொட்டகுடி ஊராட்சி |
ஏற்றம் | 2,160 m (7,090 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 625582 |
வாகனப் பதிவு | TN-60 |
கொளுக்குமலை கடல்மட்டத்திலிருந்து 7130 அடி உயரத்தில் உள்ளது. இங்கு தேயிலை அதிகம் விளைகிறது. இதனருகே கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தின் சூரியநெல்லி (6.6 கிலோ மீட்டர்) மற்றும் மூணார் (32 கிலோ மீட்டர்) நகரங்கள் உள்ளது.
போக்குவரத்து வசதிகள்
தொகுபோடியிலிருந்து கொளுக்குமலைக்கு நேரடிப் பேருந்து வசதிகள் இல்லை. எனவே போடி நகரத்திலிருந்து போடி மெட்டு வரை பேருந்து மூலம் சென்று, அங்கிருந்து கேரளாவின் சூரியநெல்லிக்குச் சென்ற பின், ஜீப்கள் மூலம் கொளுக்குமலை செல்லலாம்.