கொள்ளுமேடு
கொள்ளுமேடு (Kollumedu) தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், வீராணம் ஏரிக்கரையோரம் அமைந்துள்ள ஒரு அழகிய இயற்கை எழில் சூழ்ந்த ஒரு சிற்றூர் ஆகும்.
கொள்ளுமேடு | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 608303 |
விளக்கம்
தொகுஇவ்வூரானது மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 241 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைநகரான கடலூரில் இருந்து 60 கிமீ தொலைவிலும், காட்டுமன்னார்கோயிலில் இருந்து 10 கிமீ தொலைவிலும் உள்ளது.[1]
இக்கிராமத்தில் கிட்டத்தட்ட நான்காயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்களில் பெருமளவினர் இஸ்லாமியர்களே ஆவர். இந்த ஊரில் அனேகர் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் வேலைபார்க்கின்றனர்.
இந்த ஊர் முந்தை காலத்தில் முக்கியத்துவம் பெற்று இருந்துள்ளது. ஊரை சுற்றவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் கொள்ளுமேடு ஊரை சார்ந்தோரே விவசாயம், உள்ளிட்ட பிற தொழில்களை செய்து வந்துள்ளனர். ஆரம்பக்காலத்தில் மின்சாரம், வங்கி, பள்ளிக்கூடம் ஆகியன இங்கு தான் அமைய பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றியுள்ள அனைத்து ஊர்களுக்கும் இங்கிருந்தே மின்சாரம் வழங்கப்படுத்து.