ஃபாட் மேன்

ஜப்பானிய நகரமான நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு வைக்கப்பட்ட குறியீட்டுப் பெயர்
(கொழுத்த மனிதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஃபாட் மேன் (ஆங்கிலம்: Fat Man; கொழுத்த மனிதன்) என்பது ஜப்பான் நகரான நாகசாக்கி மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டாகும். முதலாவது (சின்னப் பையன்) ஹிரோஷிமா மீது ஆகஸ்ட் 6, 1945 இல் போடப்பட்டது. அமெரிக்காவின் முன்னைய அணுவாயுத வடிவமைப்புக்கு "ஃபாட் மேன்" என்ற மாதிரியைப் பின்பற்றியே அமைக்கப்பட்டன. இது புளுட்டோனியம் கருவைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆயுதம் ஆகும்[1]ஃபாட் மேன்' என்பது வின்ஸ்டன் சேர்ச்சிலைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகிறது[2].

கொழுத்த மனிதன்
(அணுகுண்டு)
Fat Man
வகைஅணு ஆயுதம்
அமைக்கப்பட்ட நாடுஐக்கிய அமெரிக்கா
அளவீடுகள்
எடை10,200 இறா. (4,630 கிகி)
நீளம்10.6 அடி (3.25மீ)
விட்டம்5 அடி (1.52மீ)

வெடிப்பின் விளைவு21 கிலோடன்கள்
Fat Man on its transport carriage.

"ஃபாட் மேன்" நிலத்தில் இருந்து 1,800 அடிகள் (550 மீ) உயரத்திலிருந்து "பொக்ஸ் கார்" என்ற பி-29 ரகப் போர் விமானத்தில் இருந்து மேஜர் சார்ல்ஸ் சுவீனி என்ற போர் விமானியால் வீசப்பட்டது. இக்குண்டு கிட்டத்தட்ட 21 கிலோடன்கள் டிஎன்டி, அல்லது 8.78×1013 ஜூல் = 88 TJ அளவு ஆற்றலை வெளிப்படுத்தியது[3]. நாகசாக்கி மலைப்பாங்கான பகுதி என்பதால், ஹிரோஷிமாவில் ஏற்பட்ட தாக்கத்துடன் ஒப்பிடும் போட்டு இங்கு சற்றுக் குறைவான விளைவுகளே ஏற்பட்டன. கிட்டத்தட்ட 39,000 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 25,000 பேர் காயமடைந்தனர்[4]. இதன் தாக்கத்தினால் பின்னர் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்[5]. 6.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. ஹக்கீம், ஜோய் (1995). அமெரிக்க வரலாறு: War, Peace and all that Jazz. நியூயோர்க்: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வெளியீடு. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-509514-6.
  2. BBC ON THIS DAY | 9 | 1945: Atom bomb hits Nagasaki
  3. What was the yield of the Hiroshima bomb?
  4. "The Avalon Project : The Atomic Bombings of Hiroshima and Nagasaki". Archived from the original on 2011-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-08-08.
  5. "The Atomic Bombing of Nagasaki, August 9, 1945". Archived from the original on செப்டம்பர் 29, 2006. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 8, 2008. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபாட்_மேன்&oldid=3547229" இலிருந்து மீள்விக்கப்பட்டது