கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றம்

2007 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் நாள் அதிகாலையில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் பல இடங்களிலும் விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கைக் காவற்துறையினர் பலவந்தமாக வெளியேற்றி தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுக்கு அனுப்பினர்[1].

வெளியேற்றத்துக்காக கூறப்படும் காரணங்கள் தொகு

கொழும்பில் விடுதிகளில் சாதாரண பொது மக்கள் போல் தங்கியிருந்து, புலிகள் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் காரணமற்ற முறையில் விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்களை அவர்களின் சொந்தப் பிரதேசத்திற்கு அனுப்புவதாக அரசு அறிவித்து தமிழர்களை பலவந்தமாக அனுப்பியபோதில் இதில் பலர் வெளிநாடுகளிற்குச் செல்லவும் திருமணத்திற்காகவும் இதர பல வேலைகளுக்குமாகக் கொழும்பில் வந்துள்ளவர்களேயாவர் என்பது தெளிவாக நிரூபிக்கப்படுள்ளது. தமிழர்களை கொழும்பில் இருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான உத்தரவினை இலங்கையின் தற்போதைய அதிபரின் சகோதரரான கொத்தபாய ராசபக்சவே காரணம் ஆகும்.[2]

மனித உரிமை மீறல்கள் தொகு

 • இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் அரசு மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் தென்னாபிரிக்க அரசு கறுப்பின மக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் போன்றது கொழும்பில் தமிழர்களை மகிந்த ராஜபக்ச வெளியேற்றும் நடவடிக்கைகள் என்று இலங்கை எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க சாடியுள்ளார்.[3]
 • கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியிருப்பது அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களை மீறியதாகும் என்று நோர்வே கண்டனம் தெரிவித்துள்ளது.
 • ஐக்கிய அமெரிக்காவும் அரசாங்கத்தின் இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது.[4]
 • கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை தலையிட வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் (ACHR) வலியுறுத்தியுள்ளது.[5]
 • கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியதனை எதிர்த்து கொழும்பில் ஜூன் 8 வெள்ளிக்கிழமை எதிர்ப்புப் போராட்டத்தினை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் நடாத்தினர்.[6]

தமிழர்களின் எதிர்ப்பு போராட்டம் தொகு

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளனர்.

வெளிநாடுகளில் எதிர்ப்பு போராட்டம் தொகு

தமிழர்களை வெளியேற்றத் தடை தொகு

கொழும்பு நகரிலிருந்து தமிழர்களை வெளியேற்ற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.[7] இதன் மூலம் கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்றவோ, தமிழர்கள் கொழும்பினுள் வருவதைத் தடுக்கவோ முடியாது என்று நீதி மன்று உத்தரவிட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. Police evict Tamils from Colombo (பிபிசி)
 2. [1]
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-06-10. பார்க்கப்பட்ட நாள் 2007-06-08.
 4. "The United States condemns the forced removal of Tamils". 2007-06-08 இம் மூலத்தில் இருந்து 2007-06-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070608174809/http://colombo.usembassy.gov/. பார்த்த நாள்: 2007-06-08. 
 5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-06-11. பார்க்கப்பட்ட நாள் 2007-06-09.
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-06-11. பார்க்கப்பட்ட நாள் 2007-06-09.
 7. http://thatstamil.oneindia.in/news/2007/06/08/lanka.html[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு